சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்: போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சபரிமலைக்கு சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கினால் பறிமுதல் செய்யப்படும். மேலும், ரூ.15 ஆயிரம்அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை நடக்கிறது. இந்த காலகட்டத்தில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமானோர் சபரிமலைக்கு செல்வார்கள். இந்த ஆண்டும் ரயில்கள், பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.

இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுசிலர் சொந்த வாகனங்களை வாடகைக்குஇயக்குகிறார்கள். வழக்கமாக இயக்கப்படும் வாடகையைவிட கட்டணம் சற்று குறைவு என்பதால், இந்த வாகனங்களை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சொந்தவாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்வது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். சொந்த பயன்பாட்டுக்கு என பதிவு செய்யப்படும் வாகனங்களை வாடகை அடிப்படையில், பொதுப் பயன்பாட்டுக்கு இயக்குவது தவறு. இதற்கான அனுமதியை போக்குவரத்து துறை வழங்கவில்லை.

சமீபகாலமாக சபரிமலைக்குச் செல்வோர் சிலர் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன. இதற்கிடையே,ஆர்டிஓகள் தலைமையில் குழு அமைத்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்தநடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in