

தொடர் அரசு விடுமுறையால் கேரளா மற்றும் தமிழகம் முழுவ தும் இருந்து சுற்றுலாப் பயணி கள் கொடைக்கானலில் நேற்று குவிந்தனர். அதனால், கொடைக்கா னல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் தவித்தனர்.
கொடைக்கானலில் தற்போது மிதமான வெயில், இதமான சாரல், தரையைத் தொட்டு தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள், பனி மூட்டம் நிறைந்த ரம்மியமான ‘குளுகுளு’ காலநிலை நிலவுகிறது. இந்த சீசனை அனுபவிக்க, கடந்த சில நாள்களாக கேரளம், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வரத் தொடங்கி விட்டனர். சுதந்திர தினம் மற்றும் ஞாயிறும் அரசு விடுமுறை என்பதால், கோடை சீசனை மிஞ்சும் வகையில் கொடைக்கானலில் வழக்கத்துக்கு மாறாக வாகனங்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, பில்லர் ராக், பேரிஜம் ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப் பட்டது.
ஒரே நேரத்தில் அதிகளவு கூட்டம் குவிந்ததால் நேற்று அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், சாலைகளை கடந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் தவித்தனர். காட் ரோட்டில் எதிரெதிரே வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நேற்று அதி காலை முதலே நெரிசல் ஏற்பட்டது.
சுதந்திர தின பாதுகாப்புப் பணிக்கு ஒட்டுமொத்த போலீஸா ரும் சென்று விட்டதால், போக்கு வரத்தை சீரமைக்க போலீஸார் இல்லை. வெளியூரில் இருந்து வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் சாலை யோரம் வாகனங்களை நிறுத்திச் சென்றனர். அவர்களுக்கு வழிகாட்ட போக்குவரத்து போலீஸார் இல்லாததால் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்கள், சாலைகள் நெரிசலால் ஸ்தம்பித்தன.
கேரள மாநிலம் வண்டிப் பெரி யாரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மாதவன் கூறுகையில், கொடைக் கானலில் தற்போது சீசன் அருமை யாக உள்ளது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தகுந்த வாறு, விசாலமான சாலைகள் இல்லாததால் ஒரே நாளில் அனைத்து சுற்றுலாத் தலங்களை யும் சுற்றிப் பார்க்க முடியவில்லை.
இரண்டு நாள்கள் தங்கினால் மட்டுமே முழுமையாக சுற்றிப் பார்க்க முடியும். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக வரும்போது, குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் வசதி, தங்குவதற்கு அறைகள் கிடைப்பது சிரமமாக உள்ளது என்றார்.