

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை குவித்த, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 73 வயது சாமுவேலுவை விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பாராட்டி வரு கின்றனர்.
திருச்சி தடகள சங்கம் சார்பில், 38-வது மாநில அளவிலான மூத்தோா் தடகள சாம்பியன் 2019 போட்டிகள், கடந்த 15, 16, 17 ஆகிய தேதிகளில் திருச்சி - காஜாமலை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் அருகே உள்ள கைவண்டூா் கிராமத்தைச் சேர்ந்த 73 வயதான சாமுவேல் பங்கேற்று, நீளம் தாண்டுதல் போட்டியில் 4.01 மீட்டா் தாண்டியும், உயரம் தாண்டுதல் போட்டியில் 1.15 மீட்டா் தாண்டியும், மும்முறை தாண்டுதல் போட்டியில் 8.47 மீட்டர் தாண்டியும் 3 தங்கப் பதக்கங்களை குவித்து, திருவள் ளூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த் துள்ளார்.
சாமுவேல் ஏற்கெனவே மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல போட்டி களில் பங்கேற்று 100-க்கு மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். அதுமட்டு மல்லாமல், 2010-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு விழா
சாமுவேலுவை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பாராட்டி வரு கின்றனர். அந்த வகையில், திருவள்ளூர் அருகே மணவாளநகரில் உள்ள புத்தா் உடற்பயிற்சி கூடம் சாா்பில் நேற்று முன்தினம் சாமுவேலுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புத்தர் உடற் பயிற்சி கூடம் நிறுவனரும், முன்னாள் தமிழக ஆணழகனுமான சீனிவாசன், தமிழ்நாடு ஆணழகன் ரவி உள்ளிட்டோர் பங்கேற்று, சாமுவேலுவை பாராட்டினர்.
சாமுவேல் வரும் டிசம்பா் 2-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை, மலேசியாவில் உள்ள குச்சிங் சேரவாகில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அந்தப் போட்டியில் பங்கேற்க போதிய பொருளாதார வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு, அரசோ தனியார் நிறுவனங்களோ உதவி செய்தால் நிச்சயம் தமிழகத்துக்கு பெருமை தேடித்தருவார் என, விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.