அமெரிக்கப் பெண்ணுடன்  காதல்: புதுச்சேரி பொறியாளருக்கு தமிழ் முறைப்படி திருமணம்

அமெரிக்கப் பெண்ணுடன்  காதல்: புதுச்சேரி பொறியாளருக்கு தமிழ் முறைப்படி திருமணம்
Updated on
1 min read

அமெரிக்க பெண்ணை காதலித்த புதுச்சேரி பொறியாளரின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி இன்று நடந்தது.

புதுச்சேரி எழில்நகரை சேர்ந்த சந்திரசேகரன்- ரேவதி தம்பதியர். சந்திரசேகரன், தம்பதிக்கு தீபக்முரளி (34) என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.

லாவண்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் தீபக்முரளி தகவல் தொழில்நுட்ப பொறியாளர். இவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் எம்எஸ் முடித்து விட்டு அங்கு பணிபுரிந்து வருகிறார். தற்போது பதவி உயர்வு பெற்று அந்நிறுவன துணைத்தலைவராக உள்ளார்.

32வயதாகும் தீபக்முரளிக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் அமெரிக்காவை சேர்ந்த சாரா பையர்ஸுக்கும் (30) காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மத்துடன் கடந்த 5ம் தேதி அமெரிக்காவில் பதிவு திருமணம் செய்தனர். அதையடுத்து முறைப்படி அமெரிக்காவில் திருமணம் நடந்தது.

இதையடுத்து தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்ய மணமகனின் பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி இன்று புதுச்சேரி பட்டேல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளை பட்டு வேட்டி, சட்டை அணிந்தும், மணப்பெண் பட்டுச்சேலை உடுத்தியும் மணமேடைக்கு வந்தனர். தொடர்ந்து மணப்பெண் கழுத்தில் மாப்பிள்ளை தீபக்முரளி தாலி கட்டினார்.

இந்த திருமண விழாவுக்கு மணமக்கள் நண்பர்கள் 20 பேர் அமெரிக்காவில் இருந்து புதுச்சேரி வந்திருந்தனர். அவர்களும் தமிழ் கலாச்சார உடைகளான பட்டுவேட்டி, பட்டுசேலை உடுத்தி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in