Published : 22 Nov 2019 04:42 PM
Last Updated : 22 Nov 2019 04:42 PM

திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை எதிர்பார்க்கும் கட்சிகள்: வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் காத்திருக்கும் சவால்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக, ஆகிய கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட ஆர்வம் காட்டுவதால் வார்டுகள் பங்கீட்டில் தீர்வுகாண பெரும்சவாலை சந்திக்கவேண்டிய நிலையில் அதிமுக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தொடங்கிவிட்டன. அதிமுக இரண்டு நாட்கள் மட்டும் அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து மனுக்களை பெற்றது.

பல்வேறு பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கியுள்ளனர். திமுக சார்பில் விருப்பமனு பெறுவது நவம்பர் 27 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனிடையே பாரதிய ஜனதா கட்சி, தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் தனித்தனியே விருப்பமனுக்களை பெற்றுவருகின்றன. திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் குறைந்தது ஐந்துக்கும் மேற்பட்ட வார்டுகளை அதிமுகவிடம் கேட்டு பெறவேண்டும் என கூட்டணிக்கட்சிகளான பா.ஜ., தே.மு.தி.க., பா.ம.க., ஆகிய கட்சிகள் விரும்புகின்றன. இந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏற்கனவே திண்டுக்கல் நகராட்சியாக

இருந்தபோது கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் தங்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் செல்வாக்கு உள்ளதாக கூறி அதிக இடங்களில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்காக தங்கள் கட்சியினரிடமிருந்து விருப்பமனுக்களையும் பா.ஜ., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் பெற்றுவருகின்றன.

கூட்டணிக்கட்சிகள் ஆண்கள் வார்டுகளையே குறிவைத்து கேட்கும் நிலைமையும் உள்ளது.

முதலில் கூட்டணிக்கட்சிகளுக்கு வார்டுகளின் எண்ணிக்கையை முடிவு செய்து, இதன்பின் போட்டியிட உள்ள வார்டுகளை முடிவு செய்து பின்னர் அதிமுக வினருக்கு வார்டுகளை ஒதுக்கி திருப்பதிப்படுத்தி தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதால் வார்டுகள் பங்கீட்டில் கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பது என்பது அதிமுகவிற்கு பெரும்சவாலாகவே உள்ளது.

இருந்தபோதும் திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 30 க்கும் மேற்பட்ட வார்டுகளில் போட்டியிட்டால் தான் மேயர் பதவியை பிடிக்கமுடியும் என அதிமுகவினர் உள்ளனர்.

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்குவது, எந்ததெந்த வார்டுகள் ஒதுக்குவது, மூன்று கட்சிகளுக்கும் ஒதுக்கியது போக மீதமுள்ள வார்டுகளில் போட்டியிட அதிமுகவினருக்கு வார்டுகளை ஒதுக்குவது என்பதும் மாவட்ட அதிமுக தலைமைக்கு பெரும்சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x