சிவகங்கை நகராட்சி தலைவர் பதவிக்கு ‘சீட்’பெற திமுகவில் கடும் போட்டி

சிவகங்கை நகராட்சி தலைவர் பதவிக்கு ‘சீட்’பெற திமுகவில் கடும் போட்டி
Updated on
1 min read

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் தலைவர் பதவிக்கு போட்டியிடு பவரை கட்சிகள் அறிவிக்க வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் அவர்கள், தங்களோடு, மற்ற கவுன்சிலர் களையும் வெற்றி பெற வைப் பதில் ஆர்வம் காட்டுவர். இதனால் தலைவர் பதவிக்குப் போட்டியிடு பவரைத் தேர்வு செய்வதில் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.

சிவகங்கை நகராட்சித் தலைவர் பதவியில் 1974, 1986-ல் சாத்தையா (திமுக), 1996-ல் ஆறுமுகம் ஜவஹர் (திமுக), 2001-ல் சாந்தி மனோகரன் (திமுக) ஆகியோர் நகராட்சித் தலைவர்களாக இருந்தனர். திமுகவில் இருந்து விலகிய முருகன் சுயேச்சையாக வெற்றி பெற்று 2006-ல் நகராட்சித் தலைவரானார்.

முருகன் கொலை செய்யப்பட் டதும் திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக வெற்றி பெற்ற நாகராஜன் நகராட்சித் தலைவ ரானார். பிறகு அவர் காங்கிரசில் இணைந்தார். 2011-ல் நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அர்ச்சுணன் வெற்றிபெற்றார்.

மேலும் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி யில் அதிமுக சார்பில் அமைச்சர் பாஸ்கரன் வெற்றி பெற்றாலும், நகராட்சியில் திமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. அதேபோல் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரசுக்கே அதிக வாக் குகள் கிடைத்தன. இதனால் சிவகங்கை நகராட்சி திமுகவுக்கு சாதகமான தாகக் கருதப்படு கிறது.

இதைய டுத்து நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. 2011-ல் திமுக சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்த நகரச் செயலாளர் துரைஆனந்த், ‘சீட்’ கேட்டுள்ளார். 2007-11 வரை நகராட்சித் தலைவராக இருந்தவரும், 2011-ல் காங்கிரஸ் சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவருமான நாகராஜன் தற்போது திமுகவில் உள்ளார். அவரும் ‘சீட்’ கேட்டுள்ளார்.1996 முதல் 2011 வரை 4 முறை கவுன்சிலராக இருந்த ஜெயகாந்தனும் ‘சீட்’ கேட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in