

கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தை அடுத்த பெரியநாயக்கன் பாளையம் ஜல்லிமேட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது தோட்டத்தில் தேவையாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயன், ஆடு வளர்த்து வருகி றார். இவர்களிடம் 120-க்கும் மேற் பட்ட ஆடுகள் உள்ளன. நேற்று முன் தினம் இவரது பட்டியில் இருந்த ஆடு, ஆறு கால்களுடன் கூடிய ஆண் குட்டியை ஈன்றுள்ளது.
இந்த ஆட்டுக் குட்டிக்கு வழக்க மான முறையில் நான்கு கால்கள் இருந்தாலும், கூடுதலாக அதன் வயிற்றின் அருகே இரண்டு கால் கள் உள்ளன. நான்கு கால்கள் உதவி யுடன் நடந்தாலும், கூடவே ஒட்டி யுள்ள இரண்டு கால்கள் அதற்கு சிரமத்தை கொடுப்பதாகவே உள்ளது.
ஆட்டுக்குட்டியை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர், ஆடு முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அதன் உயிருக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் பரவியதை யடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், ஆறு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.