Published : 22 Nov 2019 10:57 AM
Last Updated : 22 Nov 2019 10:57 AM

சபரிமலை பக்தர்களுக்காக வாடகைக்கு விடப்படும் சொந்த பயன்பாட்டுக்கான கார்கள் பறிமுதல்: போக்குவரத்து துறை எச்சரிக்கை

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்படும் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

வாகனங்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களில் நம்பர் பிளேட்டுகளை போக்குவரத்துத் துறை வழங்குகிறது. சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்க ளுக்கு வெள்ளை நிறமும், வர்த்த கப் பயன்பாட்டுக்கு மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகளும் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. வர்த்தகப் பயன்பாடு எனில், அதற்கேற்ப வரி மாறுபடுகிறது. சொந்த பயன் பாட்டுக்கு சில வரிகள் விதிக்கப் படுவதில்லை. வாடகை வாகனங் களை ஒப்பிடும்போது, சொந்த பயன்பாட்டு கார்களுக்கான காப்பீட்டுத் தொகை குறைவு. மேலும், அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வாகன தகுதி சான்று (எஃப்.சி.), வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது தற்காலிக அனுமதி (டி.பி.) பெறத் தேவையில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி, அதிக லாபம் பெறும் நோக்கில் சிலர் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விடுகின்றனர். இதனால், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பல்வேறு வரிகளைச் செலுத்தி வாகனங்களை இயக்கும் வாடகை வாகன உரிமையாளர்களின் வாழ்வா தாரமும் பாதிக்கப்படுகிறது.

சபரிமலை சீசனை முன்னிட்டு, சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை சபரிமலை செல்லும் பக்தர்கள் வாடகைக்கு எடுத்துச் சென்றால், மோட்டார் வாகனச் சட்டப்படி வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும், என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

விபத்து அபாயம்

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, ‘வாடகை வாகனங்களை இயக்குபவர்கள் அதற்கென தனியே ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு மலைகள், நெடுஞ்சாலைகளில் காரை இயக்கியதற்கான அனுபவமும் இருக்கும். ஆனால், சொந்த பயன்பாட்டுக்கான வாகனங் களை, வாடகைக்கு எடுத்துச் செல்பவர்களுக்கு போதிய அனுபவம் இருக்காது. நெடுந்தூரம் கார்களை இயக்கும்போது, விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சொந்த பயன்பாட்டுக்கான வாகனத்தை வாடகைக்காக இயக்கினால், ரூ.5 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, வாகனப் பதிவு சான்று (எஃப்.சி.) இல்லையெனில், ரூ.500, மாசுக் கட்டுப்பாட்டு சான்று (பி.யு.சி.) இல்லையெனில் ரூ.1,000, வாகனக் காப்பீடு இல்லையெனில் ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது.

இழப்பீடு கிடைக்காது

சொந்த பயன்பாட்டுக்கான காரை வாடகைக்காக பயன்படுத் தப்படும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு விபத்துக் கான இழப்பீடு கிடைக்காது. வர்த்தகப் பயன்பாட்டுக்கான வாடகை காரில் பயணிக்கும்போது விபத்தில் சிக்கினால் மட்டுமே, பயணிகளுக்கு இழப்பீடு கிடைக்கும்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x