Published : 22 Nov 2019 10:55 AM
Last Updated : 22 Nov 2019 10:55 AM

சூரிய ஒளி மின் சக்தி மையம் அமைக்கும் பணி நிறைவு: கவுண்டம்பாளையத்தில் தினமும் 4,500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு -  மாநகராட்சிக்கு மாதம் ரூ.8.5 லட்சம் மின் கட்டணம் மிச்சமாகும்

கோவை 

கோவை மாநகராட்சி நிர்வாகம், ஆணையர் தலைமையில் செயல் படுகிறது. பிரதான அலுவலகம், 5 மண்டல அலுவலகங்கள், வார்டுகளில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகங்கள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர் அலுவலகங்கள், மருத்துவமனை கள், சமுதாயக் கூடங்கள் என மாநகராட்சிக்கு சொந்தமாக ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஆண்டுதோறும் ரூ.20 கோடிக்கு மேல் மின் பயன்பாட்டுக் கட்டண மாக, மின்வாரியத்துக்கு செலுத்தப் படுகிறது. இதை குறைக்கும் வகையில், தமிழ்நாடு எரிசக்தி முகமை, நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி நிறுவனம், கோவை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து, மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி துறையின் மானிய உதவியுடன், மாநகரில் மொத்தம் 127 இடங்க ளில் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்க முடிவு செய்தன.

முதல் கட்டமாக, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம், கவுண்டம் பாளையத்தில் தலா ஒரு மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. உக்கடம் கழிவுநீர் பண்ணை செல்லும் சாலையில், 5 ஏக்கர் பரப்பில் ரூ.5.5 கோடியில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. இந்த மையம் கடந்த ஜனவரி மாதம் பயன்பாட் டுக்கு வந்தது.

இதேபோல், கவுண்டம்பாளை யம் பழைய குப்பைக் கிடங்கு வளாகத்தில், ஒரு மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி மையம் அமைக்கும் பணி, கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கவுண்டம்பாளையத்தில் 5 ஏக்கரில் ரூ.5.5 கோடி மதிப்பில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி மையத் துக்கான கட்டமைப்பு அமைக்கப் பட்டுள்ளது. இப்பகுதியை சீரமைத்து, சமவெளிபோல் தயார் செய்து, சூரிய ஒளி மின் உற்பத்திக்காக 3,168 வெப்பத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. கட்டமைப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.

இந்த மையத்தில் இருந்து தினமும் சராசரியாக 4,500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இந்த வளாகத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய கவுண்டம்பாளை யம் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து துடியலூர், கவுண்டம்பாளையம், கிரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும், ஏராளமான தொழில் நிறுவனங் களுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்துடன் இணைக்கும் ‘கிரிட் சிங்க்ரே சன்’ பணியும் சமீபத்தில் முடிக்கப் பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் சோதனை ஓட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளியங்காடு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மாதந்தோறும் சராசரியாக 9.50 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் ரூ.70 லட்சம் மின் கட்டணம் செலுத்தப் படுகிறது. உக்கடம் சூரிய ஒளி மின்சக்தி மையம் மூலமாக ரூ.8.50 லட்சம் கட்டணத் தொகை மாநகராட்சிக்கு மிச்சமாகிறது. அதேபோல், கவுண்டம்பாளையம் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி மையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், மின்வாரியத்துக்கு வழங்கப்படும். இதற்கு பதில், வெள்ளியங்காடு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மாநகராட்சியால் செலுத்தப்படும் கட்டணத்தில் இருந்து, ரூ.8.50 லட்சம் வரை கட்டணத்தொகை கழித்துக் கொள்ளப்படும்’’ என்றார்.

முறைப்படி தொடங்கப்படும்

மாநகராட்சி துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி கூறும்போது, ‘‘கவுண்டம்பாளையம் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி மையம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த மையத்துக்கும், கவுண்டம்பாளையம் மின்சார வாரியத்துக்குமான இணைப்பு பணிகள் முடிந்துள்ளன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டு, அதற்கேற்ப மாநக ராட்சி கட்டிடத்தின் மின்பயன்பாட்டு கட்டணம் கழித்துக் கொள்ளப்படும். சில தினங்களில் முறைப்படி இம்மையம் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x