

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
திருநெல்வேலியில் இருந்து பிரியும் இப்புதிய மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். விழாவில் ரூ.89 கோடி மதிப்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழாவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்கிறார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் நன்றி கூறுகிறார். விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.