

உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
96 வயதான திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்தசில ஆண்டுகளாக சென்னை கீழப்பாக்கத்தில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் திமுகவின் செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை.
குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், திமுக முக்கியத் தலைவர்கள் தவிர வேறு யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் வீட்டுக்கு நேற்று காலை சென்ற ஸ்டாலின் அவரிடம் உடல்நலம் விசாரித்தார். திமுக பொருளாளர் துரைமுருகனும் அப்போது உடனிருந்தார்.