மருத்துவ முகாமுக்கு சென்ற முதியவர் சடலமாக மீட்பு சிறுநீரகங்களை திருடியதாக மகன் புகார்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இலவச மருத்துவ முகாமுக்குச் சென்ற முதியவர் மதுரை அருகே சடலமாக மீட்கப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் திருடப்பட்டு இருக் கலாம் என மகன் போலீஸில் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் எழுமலை அருகிலுள்ள ஆதன் காகரைபட்டியில் நவ.12-ல் தனியார் அமைப்புகள் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

இதில் சிகிச்சை பெறுவதற்கு அதே ஊரைச் சேர்ந்த தவசி (68) சென்றார். அவரிடம் ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கேட்டு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தவசி அங்கிருந்து சென்றுவிடடார்.

ஆனால், நவ.14-ம் தேதி வரை தவசி வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த தவசியின் மகன் லோகமணி எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தவசி மாயமானதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடினர். இதற்கிடையே, மதுரை அருகே துவரிமானில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் இருப்பதாக எழு மலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸார் தவசியின் புகைப்படத்தை வைத்து ஆய்வு செய்தனர். துவரிமானில் இறந்து கிடந்தது தவசிதான் என உறுதியானது. அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தினர். எழுமலை காவல் ஆய்வாளர் சார்லஸ் விசாரிக்கிறார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், இலவச சிகிச்சைக்கென அழைத்துச் சென்று சிறுநீரகங்களைத் திருடிவிட்டு உடலை வீசிச் சென்றிருக்கலாம் என தவசியின் மகன் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரிக்கிறோம். பிரேதப் பரிசோதனையில்தான் உண்மையான காரணம் தெரியவரும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in