ரஜினி, கமல் இணைந்தால் கவலையில்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து

ரஜினி, கமல் இணைந்தால் கவலையில்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து
Updated on
1 min read

அரசியலில் ரஜினி, கமல் இணை ந்தால் எங்களுக்கு கவலை யில்லை என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விளாத்திகுளத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,125 பேருக்கு ஒரு கோடியே 75 லட்சத்து 35 ஆயிரத்து 805 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:ரஜினி, கமல் அரசியலில் இணைந்தால் எங்களுக்கு கவலை யில்லை. தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக உள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இது அமல்படுத்தப்பட்டால் திரைத்துறை அனைத்து நிலைகளிலும் சீர்படுத்தப்படும். அனைத்து திரையரங்குகளிலும் பாரபட்சமின்றி திரைப்படங்களை திரையிட வேண்டும் என, அறிவு றுத்தி உள்ளோம். மாநகராட்சி பகுதிகளில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள், ‘எங்களுக்கு அந்த திட்டம் தேவையில்லை.

எங்களிடம் உள்ள திரையரங்கை இரண்டு அல்லது மூன்றாக மாற்ற அனுமதி வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். அந்த துறையை சேர்ந்தவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை தான் அரசு செய்ய முடியும். அதற்குரிய அனுமதி ஓரிரு தினங்களில் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in