மரணம் குறித்து ஓவியம் வரைந்து, கவிதை எழுதிவிட்டு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

பிரசாத்
பிரசாத்
Updated on
1 min read

திருச்சியிலுள்ள தூய பவுல் இறை யியல் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்த மாணவர் தனது மரணம் குறித்து ஓவியம், கவிதை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி ஆரோக்கியசாமி நகரைச் சேர்ந்த மரியசூசை மகன் பிரசாத்(25). இவர்திருச்சி கன்டோன்மென்ட் பாரதியார் சாலையிலுள்ள தூய பவுல் இறையியல் கல்லூரியில் குரு பட்டம் பெறுவதற்கான படிப்பை 2-ம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிப் பயின்ற இவர், நேற்று முன்தினம் மாலை தனது அறையில் உள்ள மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த கன்டோன்மென்ட் சப் இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீஸார் அங்கு சென்று, அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று உடலைக் கைப்பற்றினர். பின்னர்அவரது அறையில் சோதனையிட்டபோது, ஒரு நோட்டில் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதி வைக்கப்பட்டு இருந்தது. அதை போலீஸார் கைப்பற்றினர்.

இதற்கிடையே, கல்லூரி அதிபர் ஆன்ட்ரூ டி ரோஸ்(58) அளித்த புகாரின்பேரில் இ.த.ச 174-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "பிரசாத்தின் அறையில் இருந்து கைப்பற்றிய நோட்டில் தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என அவர் மரணக்குறிப்பு எழுதி வைத் துள்ளார்.

மேலும், 8 வயதிலிருந்தே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் காத்திருந்ததாகவும், இதுகுறித்து யாரிடமும் கூறியதில்லை எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, அந்த நோட்டின் முன் பக்கத்திலேயே மரணம் எனத் தலைப்பிட்டு, ஒவ்வொரு மதமும் மரணம் குறித்து என்ன சொல்கிறது என வரிசையாக எழுதி வைத்திருந்தார்.

நீண்டநாள் சிந்தனை

அடுத்தடுத்த பக்கங்களில் மரணம் குறித்த சில கவிதை களும் எழுதப்பட்டிருந்தன. இதுதவிர தனது அறையின் உள்பகுதி, அதில் தூக்கில் தொங்கும் விதம் ஆகியவை குறித் தும் பிரசாத் அந்த நோட்டில் ஓவியமாக வரைந்திருந்தார்.

சிறு வயதிலிருந்தே அவருக் குள் தற்கொலை எண்ணம் இருந்து வந்துள்ளது. அது மன நோயாக மாறி, தற்போது அவரது உயிரையே பறித்து உள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, மாணவரின் குடும்பத்தினர் எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை. திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது" என்றனர்.

திருச்சியில் கடந்த 13-ம் தேதிஅய்மான் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி விடுதி அறையில் ஷபாரா பர்வீன் என்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அடுத்த ஒருவாரத்துக்குள்ளாக கிறிஸ்தவ இறையியல் கல்லூரி யில் பிரசாத்என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in