Published : 21 Nov 2019 09:32 AM
Last Updated : 21 Nov 2019 09:32 AM

தமிழகத்தில் துபாய் தொழில் பூங்கா அமைக்க முதல்வருடன் தொழிலதிபர்கள் ஆலோசனை: பல்வேறு துறைகளில் ரூ.3,750 கோடி முதலீடு செய்யவும் திட்டம்

தமிழகத்தில் துபாய் தொழில் பூங்கா அமைப்பது மற்றும் பயோ டீசல், கடல் உணவு ஏற்றுமதி, தள வாடங்கள் உற்பத்தி, சுகாதார துறைகளில் ரூ.3,750 கோடி முதலீடு செய்வது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனி சாமியை சந்தித்து துபாய் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தினர்.

தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங் களில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு 13 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண் டார்.

அப்போது, அந்த நாடுகளின் தொழிலதிபர்களை, தொழில் முனைவோரை சந்தித்து தமிழகத் தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் உள்ள சாதக சூழல்கள் குறித்தும் விளக்கினார். இதன் அடிப்படை யில், ரூ.8,835 கோடிக்கான முதலீடு களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. துபாயில் மட்டும் ரூ.3,750 கோடிக்கான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொழிலதிபர்கள் குழு சந்திப்பு

இதைத் தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகத்துக்கு துபாய் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெயின்ட் குழும தலைவர் சுரேஷ் அகர்வால், இந்திய வர்த்தக கண்காட்சி மையத்தின் இயக்குநர்  பிரியா குமாரியா, சன்னி குழும தலைவர் சன்னிகுரியன், ஓசன் ரப்பர் நிறுவன தலைவர் கே.எம்.நூர்தின், ப்ரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் கோச்சார், காம்ரோ சர்வதேச நிறுவனத்தின் துணைத்தலைவர் வின்சென்ட் ஜோஸ் நீல்ஸ், பேஸ் குழும தலைவர் பி.ஏ.இப்ராகிம், இஎஸ்பிஏ குழும பங்குதாரர் ஸ்வேதா பாலசுப்பிரமணி, அப் பேரல் எக்ஸ்போர்ட் புரோமோசன் கவுன்சில் துணைத் தலைவர் ஏ.சக்திவேல் ஆகியோர் வந்தனர்.

அவர்கள் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் கே.சண்முகம், செயலர்கள் ச.கிருஷ்ணன் (நிதி), முருகானந்தம் (தொழில்), ககன்தீப்சிங் பேடி (வேளாண்மை) உள்ளிட்டோர் பங்கேற்றனர். சந்திப்பு முடிவில் செய்தியாளர் களை சந்தித்த, இந்திய வர்த்தக கண்காட்சி மையத்தின் இயக்குநர்  பிரியா குமாரியா கூறிய தாவது:

துபாய்க்கு வருகை தந்திருந்த முதல்வர் பழனிசாமி, அந்த நாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று இங்கு வந்து 4 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.

பயோ டீசல், கடல் உணவுகள் ஏற்றுமதி, தளவாடங்கள் உற்பத்தி, சுகாதாரத் துறைகளில் ரூ.3,750 கோடி மதிப்பில் முதலீடுகளை மேற்கொள்ள முடி வெடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, துபாயில் உள்ள முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஏதுவாக துபாய் தொழில் பூங்கா அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

காலக்கெடு நிர்ணயம்

தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு 3 மாதத்துக்குள் தேவையான நிலங்களை கண்டறிந்து, 6 மாதங் களுக்குள் தொழில்களை தொடங் குவதற்கான அனைத்து பணிகளை யும் நிறைவு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தமி ழகத்தில் தொழில் தொடங்குவதற் கான துபாய் முதலீட்டாளர்களின் முதல்படியாகும்.

தமிழக முதல்வர் எங்களுக்கு சிறப்பான வரவேற்பும் ஒத்துழைப்பும் அளித்தார். புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத் தில் தொழில் தொடங்குவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எங்கு முதலீடு

முதல்வரின் துபாய் பயணத்தின் போது, ரூ.3,750 கோடி முதலீட் டில் 10,800 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. இதில், ஐக்கிய அரபு அமீ ரக நிறுவனமான டி பி வேர்ல்டு, சென்னை எண்ணூர் அருகில் ரூ.1000 கோடி முதலீட்டில் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக் கும் சரக்கு பெட்டக பூங்காவுக்கான பணிகளை தொடங்கியுள்ளது.

மின் ஆட்டோக்கள்

மேலும், பெட்ரோல் ஆட்டோக் களை மின் ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி முதலீட்டில் துபாயின் கே.எம்.சி குழுமம் மற்றும் மோட்டா எலெக்ட்ரிக் மொபிலிடி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந் தம் செய்தன. இதன்படி, மின் ஆட்டோக்கள் படிப்படியாக இம் மாத இறுதியில் இருந்து இயக்கப் பட உள்ளன. இதற்கு தேவையான அனுமதிகளும் அரசால் வழங்கப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x