

சென்னை
சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பள்ளி மாணவர்களுக்கு துணிப்பை விநியோகிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் திருவான்மியூரில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ் டிக் உபயோகிப்பதால் ஏற்படும் சுகாதார கேடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து பாரம்பரி யமாக பயன்படுத்தக் கூடிய வாழை இலைகள், பாக்கு மர தட்டுகள், துணிப்பைகள், சணல் பைகள் போன்றவற்றை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் விளக்கினார்.
மாணவ, மாணவியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு உத்கர்ஷ் குளோபல் பவுண்டேஷன் ஒத்துழைப்புடன் சுமார் 1600 துணிப்பைகள் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் விதம், அதன் வாழ்க்கை சுழற்சி, உருவாகாமல் தடுக்கும் முறைகள் முதலியன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை ஒத்துழைப்புடன் “எனது பள்ளி எனது மரம்” திட்டத்தின் படி மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் 50 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் பராமரிப்பு நிதியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், பள்ளி தலைமையாசிரியை சிவ காமி ஆகியோர் கலந்து கொண் டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.