

80 குற்ற வழக்குகளில் சிக்கியவர் உட்பட 13 ரவுடிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளரவுடிகள் குண்டர் தடுப்பு காவல்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி திருமுல்லைவாயல் சிரஞ்சீவி (24), அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (23), அருள்பாண்டியன் (23), தேனாம்பேட்டை செல்வகுமார் (33), பள்ளிக்கரணைகோபிநாத் (31), சூளைமேடு கார்த்திகேயன் (29), ஜாபர்கான்பேட்டை தினேஷ் குமார் (32), அண்ணாநகர் கிழக்கு கணேஷ் (28), திருநெல்வேலி பால் மாயாண்டி (30), செங்குன்றம் சேதுபதி (25), திருவல்லிக்கேணி வினோத் (29), அவரது சகோதரர் பாலாஜி (27), அதே பகுதி சத்யா (29) ஆகிய 13 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் குமார் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உட்பட 80 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், ஏற்கெனவே 7 முறை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் மீதம் உள்ளவர்கள் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.