ரிப்பன் கட்டிடத்தில் மேயர் கொடியேற்றினார்: 24 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

ரிப்பன் கட்டிடத்தில் மேயர் கொடியேற்றினார்: 24 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
Updated on
1 min read

இந்தியாவின் 69-வது சுதந்திர தினத்தையொட்டி மேயர் சைதை துரைசாமி ரிப்பன் கட்டிடத்தில் நேற்று கொடியேற்றினார்.

சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டிட வளாகத்தில் 69-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேசிய சாரண, சாரணியர் அணிவகுப்பு மற்றும் வாத்தியக் குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மேயர் சைதை துரைசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் 2014-2015-ம் கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த 22 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.10ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.9 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.8ஆயிரம் பரிசாக வழங்கினார்.

மேலும் ஓட்டேரி ராகமாலிகா மகளிர் சுயஉதவிக்குழுவுக்கும், வடபழனி நித்தியமல்லி மகளிர் சுயஉதவிக்குழுவுக்கும் ரூ.15.50 லட்சத்தை வங்கி கடன் இணைப்பாக மேயர் வழங்கினார். 2014-15-ம் ஆண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு இலக்காக, சென்னை மாவட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.352 கோடியை விட ரூ.6 கோடி அதிகமாக ரூ.358 கோடி கடன் இணைப்பை 9,493 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஏற்படுத்தியதற்கு மேயர் பாராட்டு தெரிவித்தார்.

கலை நிகழ்ச்சிகளிலும், அணிவகுப்பிலும் பங்கேற்ற மாநகராட்சிப் பள்ளி மாணவர் களுக்கு சான்றிதழ் களையும் கேடயங்களையும் மேயர் வழங் கினர். இந்த விழாவில் துணை மேயர் பா.பென்ஜமின், ஆணை யாளர் விக்ரம் கபூர், துணை ஆணையர்கள், வட்டார இணை ஆணையர்கள், மாமன்ற உறுப்பி னர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in