Published : 20 Nov 2019 01:03 PM
Last Updated : 20 Nov 2019 01:03 PM

கவுன்சிலர்கள் மூலம் தேர்வாகும் மறைமுக தேர்தல் வந்தால் மேயர் தேர்தலில் ஆர்வம் காட்ட திமுகவினர் தயக்கம்

மாநகராட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் வந்தால் மேயர் வேட்பாளராக களம் இறங்க திமுக.வினர் தயக்கம் காட்டுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் எப் படியாவது `சீட்' வாங்கி விட வேண்டும் என அதிமுக, திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மதுரை மாநகராட்சியில் 2 கட்சிகளிலும் வார்டுக்கு 5 முதல் 10 பேர் வரை விருப்ப மனு அளித்துள்ளனர். மேயர் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் பகுதிச் செயலாளர்கள் உட்பட 30 பேர் விருப்ப மனு அளித் துள்ளனர். திமுகவில் 5 பேர் மனு அளித்துள்ளனர். திமுகவில் நவ.27-வரை மனு வழங்க அவ காசம் இருப்பதால் மேலும் பலர் விருப்ப மனு அளிக்கலாம்.

மக்கள் நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தால் திமுகவில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதேநேரத்தில் மறைமுகத் தேர்தல் என்றால் தயக்கம் காட்டுகின்றனர்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: மேயர் தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களித்தால் திமுக வெற்றிபெற அதிகம் வாய்ப்புள்ளது. மாநகராட்சியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளே அதிமுகவின் தோல்விக்கு வழி வகுக்கும். நேரடி தேர்தல் எனில் கட்சித் தலைமை சரியான வேட் பாளரை தேர்வு செய்யும். செலவு உள்ளிட்ட விஷயங்களை மேயர் வேட்பாளரே ஓரளவு பார்த்துக் கொள்வார். தனது வெற்றியை முக்கியமாகக் கருதும் மேயர் வேட்பாளர், கவுன்சிலர் பதவிக்கும் தகுதியான வேட்பாளரைத் தேர்வு செய்ய நிர்பந்திப்பார். கூட்டணிக் கட்சிகள் இணைந்த பணிக்குழு அமைக்கப்பட்டு, தேர்தல் பணியும் முறையாக நடக்கும். புறநகர், மாநகர் நிர்வாகிகளும் இணைந்து செயல்படுவர். மேயர் தேர்தலில் திமுகவுக்கு இருக்கும் சாதகமான சூழல் வாக்குப்பதிவிலும் எதி ரொலிக்கும். வெற்றிக்குப் பின்னர் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

அதே நேரம், மறைமுகத் தேர்தல் என்றால் எந்தக் கட்சி கவுன்சிலர்கள் அதிகம் வெற்றி பெறுகின்றனரோ, அதைப்பொருத்தே மேயர் தேர்வு இருக்கும். ஆளுங்கட்சியினர் கவுன் சிலர்களை விலைக்கு வாங்குவது, கட்சி மாறி வாக்களிக்க வைப்பது எனப் பல்வேறு விதிமீறல்கள் நடக்கும். எதையும் நம்பிச் செய்ய முடியாத இக்கட்டான நிலை உருவாக்கப்படும். திமுக அதிக கவுன்சிலில் வெற்றி பெற் றாலும், ஆளுங்கட்சியை மீறி திமுக மேயரை வெற்றிபெற விடுவார்களா என்பது சந்தேகமே.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என அவ்வப்போது இடையூறு ஏற் படுத்தி நிர்வாகக் குளறுபடியை ஏற்படுத்துவர். இதுபோன்ற பல் வேறு பிரச்சினைகளை எதிர்கொள் வது சிரமம் என்பதால் திமுகவினர் ஆர்வம் காட்டும் வாய்ப்புக் குறைவு. இவ்வளவையும் மீறி திமுக வெற்றி பெற கட்சித் தலைமை எத்தகைய உத்தியைக் கையாள்கிறதோ, அதைப்பொருத்தே கட்சியினரின் செயல்பாடு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்வர் பரிந்துரை எடுபடுமா?

அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், அதிமுகவில் மதுரை மேயர் பதவிக்கு 30 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில் தேர்தல் நேரடியாகவா, மறைமுகமாகவா என்பதைப் பொருத்து வேட்பாளர் தேர்வு இருக்கும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பரிந்துரையில் சீட் பெற்றுவிடுவோம் என சிலர் கூறுகின்றனர். அப்படி நடந்தால் பெண் வேட்பாளர் எனில் முன்னாள் கவுன்சிலர் கண்ணகி பாஸ்கர், ஆண் வேட்பாளர் எனில் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தேர்வு எனில் கிரம்மர் சுரேஷ் அல்லது முன்னாள் துணை மேயர் முனியசாமி மகள் சண்முகவள்ளி ஆகியோரில் ஒருவராக இருக்கலாம். மறைமுகத் தேர்தல் என முடிவானால் செல்லூர் கே.ராஜூ அல்லது முன்னாள் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோரின் குடும்பத்தில் ஒருவர் வாய்ப்பைப் பெறலாம், என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x