

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேரால யத்தில் நேற்று மாலை நடை பெற்ற கொடியேற்று விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங் கேற்றனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா தொடங்கி யதை முன்னிட்டு, மறை கோஷங் கள் முழங்க பேழையில் எடுத்து வரப்பட்ட திருக்கொடியை நேற்று மாலை 6 மணியளவில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத் தார். பின்னர், அந்தக் கொடி, வாத் தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
வேளாங்கண்ணி கடைத்தெரு, ஆரிய நாட்டுத்தெரு, கடற் கரை சாலை வழியாக ஊர்வல மாக எடுத்து வரப்பட்டு, லட்சக் கணக்கான பக்தர்களின் வாழ்த்து முழக்கங்கள், மாதா பெருமை பாடல்கள் இசைக்க தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் உதவி பங்கு தந்தையர் கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றினர். தொடர்ந்து, வாணவேடிக்கைகள் நடை பெற்றன. கொடியேற்றம் நடை பெற்றபோது, கொடி மரத்தை நோக்கி பக்தர்கள் காசுகளை வீசி எறிந்தனர். அவற்றை பலர் போட்டிபோட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து பேராலய கலை யரங்கில் மாதா மன்றாட்டு ஆரா தனை, நற்கருணை ஆசீர்வாதம், தமிழ் திருப்பலி நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இவற்றில், பேராலய அதிபர் பிரபாகர், பங்குத் தந்தை யர் சூசைமாணிக்கம், ஆரோக்கிய தாஸ் மற்றும் உதவி பங்குத் தந்தையர், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி திருவிழா நிறைவடைகிறது.