பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸாரை தாக்கிய மாணவர் கைது

பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸாரை தாக்கிய மாணவர் கைது
Updated on
1 min read

பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் 3 பெண் காவலர்களைத் தாக்கிய கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவரது மகள் சத்யா(19). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தொகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதாப்(21) என்பவருடன் நட்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் பர்கூர் காவல் நிலையத்தில், சத்யா மற்றும் பிரதாப் ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சத்யாவின் உறவினரான கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி முதுகலை மாணவர் கவியரசு(25), சத்யாவை தாக்கினார்.

இதைத் தட்டிக் கேட்ட பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கலைராணி, மகேஸ்வரி, தியாகவதி ஆகியோரையும் கவியரசு தாக்கினர். இதில் காயம் அடைந்த போலீஸார், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக கலைராணி அளித்த புகாரின் பேரில், பர்கூர் போலீஸார் கவியரசுவை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in