Published : 20 Nov 2019 09:51 AM
Last Updated : 20 Nov 2019 09:51 AM

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருப்பதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 20-ம் தேதி (இன்று) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இடியுடன் பெய்யும். வெப்பநிலை 25 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x