அரசு மற்றும் தனியார் துறைகளில் கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்: அமைச்சர் ப.மோகன் தகவல்

அரசு மற்றும் தனியார் துறைகளில் கடந்த 4 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்: அமைச்சர் ப.மோகன் தகவல்
Updated on
2 min read

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டு களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் சுமார் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையி்ல் நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ப.மோகன் பேசிய தாவது:

தமிழகத்தில் 9.68 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் 63.98 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதன்மூலம் தமிழகத்துக்கு ரூ.67 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 76 அறிவிப்புகளுக்கு அரசா ணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக்கும் திட்டத் தில் 4 ஆண்டுகளில் 1,718 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 846 பேருக்கு ரூ.77.71 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டுள் ளது. ரூ.430.31 கோடி மதிப் பீட்டில் தொழில்கள் தொடங்கப் பட்டுள்ளன. மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 297 மகளிர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகியுள்ளனர்.

தொலைநோக்குத் திட்டம் 2023-ன்கீழ், 5 ஆண்டுகளில் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் படி, கடந்த மாதம் 31-ம் தேதி வரை 14 லட்சத்து 29 ஆயிரத்து 558 பேருக்கு வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 5,930 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 42,318 சிறு தொழில் முனைவோருக்கு ரூ.623.78 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஒற்றை சாளர அனுமதி திட்டம்

தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு அரசு துறைகளிடம் இருந்து அனுமதி, தடையில்லா சான்று பெறுவதில் இருந்த சிக்கல்களை தீர்க்க, ஒற்றைச் சாளர முறை அனுமதி திட்டம் குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின்கீழ் 25 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலத் தில் 2,202 வேலைநிறுத்தம், 70 கதவடைப்புகள் நடந்துள்ளன. இந்த ஆட்சியில் இது குறைந்துள்ளது. தமிழகத்தில் தொழில் அமைதி நிலவுகிறது. இதற்கு தொழிற்சங்கங்களின் ஆதரவும் இருந்தது. தொழிலாளர் நலவாரியத்தின்கீழ், 19 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு ரூ.485 கோடி நல உதவி வழங்கப்பட்டுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு, 14,387 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். தற்போது கட்டுமானத் தொழில் பிரிவில் 1,786 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்புத்துறை

கடந்த 2011-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள், பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 4 ஆண்டுகளில் 59 லட்சத்து 83 ஆயிரத்து 686 பேர் பதிவு செய்துள்ளனர். அரசுத்துறையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 226 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சேர்த்து 3 லட்சத்து 91 ஆயிரத்து 565 பேர் வேலைவாய்ப்பு பெற் றுள்ளனர். வேலையில்லாத இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 787 பேருக்கு ரூ.94.39 கோடியும், 90,760 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38.67 கோடியும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in