ஆன்லைன் பத்திரப் பதிவை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஆன்லைன் பத்திரப் பதிவை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

ஆன்லைன் பத்திரப் பதிவு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழகஅரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த சின்னராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் கடந்த 2018-ம்ஆண்டு பிப்ரவரி முதல் ஆன்லைன் மூலமாக பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால், ஆன்லைன் மூலம்பத்திரப் பதிவு செய்வதற்கு போதுமான மென்பொருள் தமிழக பத்திரப்பதிவு துறையிடம் இல்லை.

ஊழியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. சொத்துகளின் முக்கிய ஆவணங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதால், அந்த ஆவணங்கள் தவறான வழியில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. காலவிரயமும் ஏற்பட்டு வருகிறது.

எனவே ஆன்லைன் பத்திரப் பதிவுக்கான தொழில்நுட்பரீதியிலான நடைமுறையை மேம்படுத்தும் வரைமுன்பு போல பழைய முறையிலேயே பத்திரப் பதிவு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவே பத்திரப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கியஅமர்வு, “இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in