Published : 20 Nov 2019 07:39 AM
Last Updated : 20 Nov 2019 07:39 AM

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்திவைப்பு: வரி சீராய்வு செய்ய குழு அமைத்துள்ளதாக அமைச்சர் தகவல்

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வரி குறித்து சீராய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் கூறிய தாவது: சென்னை மாநகராட்சியில் கடந்த 1998-க்குப் பின்னரும் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 2008-க்குப் பின்னரும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சொத்து வரி சீராய்வு மேற்கொள் ளப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதன் அடிப் படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி அறி விக்கை வெளியிடப்பட்டது. வாடகை அல்லாத சொந்த கட்டிடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பிறவகை கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும் சொத்து வரி உயர்த்தப் பட்டது.

அதன்பின், கடந்தாண்டு ஜூலை 28-ம் தேதி வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்புகள் அனைத்துக்கும் சொத்துவரி 50 சதவீதத்துக்கும் மிகாமல் உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் அனைத்து உள்ளாட்சி அமைப்பு களிலும் சொத்து வரி சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விரி வாக்கம் செய்யப்பட்ட 6 மாநகராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகளில் ஏற் கெனவே இணைக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய நகர்ப்புற உள் ளாட்சி அமைப்பில் உள்ளது போன்றே திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப் பீட்டின்படி சொத்து வரி உயர்த்தப்பட்டது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் தவிர மற்ற அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் குறைவாக அளவீடு செய் யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மறுஅளவீடு செய்யப்பட்டு, சொத்து வரி யும் மறுநிர்ணயம் செய்யப் பட்டது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து சொத்து வரியை குறைக்க கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில், வரி உயர்வை நிறுத்தி வைத்து சீராய்வு செய்யப் படும் என்று தெரிவித்திருந்தோம். தொடர்ந்து சில மாநகராட்சி களில் அதிகளவாக சொத்துவரி வசூலிக்கப்படுவதாகவும் தகவல் வந்தது.

இதையடுத்து, உயர்த்தப்பட்ட சொத்து வரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிதித்துறை செயலர் (செல வினம்) சித்திக் தலைமையில் நக ராட்சி நிர்வாக ஆணையர் பாஸ் கரன், பேரூராட்சிகள் இயக்குநர் பழனிசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகி யோர் குழு உறுப்பினர்களாக இருப் பார்கள். குடியிருப்போர் நலச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மீது இந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இந்தக் குழு விரை வாக தனது அறிக்கையை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக் கையின்படி சொத்துவரி மாற்றி அமைக்கப்படும்.

அதுவரையில் 15 மாநகராட்சி கள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வுக்கு முன், கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி செலுத்தி வந்த அதே வரியை செலுத்தினால் போதும். இதற்கான அரசாணை போடப்பட்டு, புதிய சொத்து வரி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூடுதலாக செலுத்திய வரி, அவர்கள் சொத்து வரிக்கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடுசெய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x