Published : 19 Nov 2019 21:25 pm

Updated : 19 Nov 2019 21:25 pm

 

Published : 19 Nov 2019 09:25 PM
Last Updated : 19 Nov 2019 09:25 PM

ரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் : அமைச்சர் ஜெயக்குமார்

rajini-let-vijay-along-with-kamal-the-aiadmk-will-rule-in-2021-minister-jayakumar

திமுக என்கிற அசுரனையே சந்தித்து வென்றவர்கள் நாங்கள். ரஜினி, கமல் ஏன் விஜய்யும்கூட சேர்ந்து வரட்டும் தமிழகத்தைப் பொறுத்தவரை நாங்கள்தான் 2021-லும் ஆட்சி அமைப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினியும் கமலும் அரசியலில் இணையவேண்டும் என சமீபத்தில் நடந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவிக்க அதே விழாவில் பேசிய ரஜினி எடப்பாடி பழனிசாமி 2 ஆண்டுகளுக்கு முன் தான் முதல்வராவார் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார் என்று பேச அதுவும் விவாதப்பொருளானது.


இந்நிலையில் கமல்ஹாசன், ரஜினி இணைகிறார்கள் என்கிற ரீதியில் சில ஊடகங்கள் விவாதத்தை கிளப்ப அதே கேள்வியை கமலிடம் விமான நிலையத்தில் கேட்க அவர் இணைய அவசியமிருந்தால் தமிழக மக்களின் நலனுக்காக இணைவோம் என்று தெரிவித்திருந்தார். முதல்வர் குறித்த ரஜினியின் விமர்சனம் நிதர்சனமான உண்மை என்று ஆதரவு தெரிவித்தார்.

சிறிது நேரத்திலேயே விமான நிலையம் வந்த ரஜினி தேவைப்பட்டால் கமலுடன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் கட்டாயம் இணைவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இதுகுறித்த தனியார் தொலைக்காட்சி கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில்:

“கமல், ரஜினி யார் எப்படி இணைந்தாலும் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. ரஜினி, கமல் அவர்களுடன் விஜய்யும் சேர்ந்து மொத்தமாக வந்தாலும் நாங்கள் சிங்கிளாக எதிர்த்து நிற்கும் திராணி படைத்தவர்கள். இந்த இயக்கம் மக்களால் பெருவாரியாக ஆதரவு பெற்ற இயக்கம்.தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் அதிமுகதான் அரியணையில் அமரும். 2021-லும் நாங்கள்தான் வருவோம்.

ரஜினி, கமல் இணைவது அவர்களது சொந்த விஷயம், அவர்கள் ஒன்று சேர்வது குறித்து எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர்கள் மட்டுமல்ல அவர்களுடன் வேறு யாரும் சேர்ந்து வந்தாலும் நாங்கள் சந்திக்க தயார்.

இந்த இயக்கம் 1972-ல் திமுக எனும் அசுரனையே எதிர்த்து எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிக்கண்ட இயக்கம். திண்டுக்கல் இடைத்தேர்தலில் அரசியல் பலம், அதிகார பலம், பணபலத்தைத் தாண்டி அதிமுக வென்று காட்டியது. எவ்வளவோ பெரிய பலம் பொருந்திய, பலமிக்க பலவான்களை பார்த்து வந்துவிட்டோம்”

என அந்த பேட்டியில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ரஜினிகமல்விஜய்சேர்ந்து வரட்டும்அதிமுக2021-லும் ஆட்சி அமைக்கும்அமைச்சர் ஜெயக்குமார்RajiniVijayKamalAIADMKWill rule in 2021Minister Jayakumar

You May Like

More From This Category

More From this Author