பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் வெங்காய விளைச்சல் அமோகம்: விவசாயிகள் உற்சாகம்

திண்டுக்கல் அருகே கலிக்கம்பட்டியில் அறுவடைக்கு பின் வயலில் உலர வைக்கப்பட்டுள்ள வெங்காயங்கள்.
திண்டுக்கல் அருகே கலிக்கம்பட்டியில் அறுவடைக்கு பின் வயலில் உலர வைக்கப்பட்டுள்ள வெங்காயங்கள்.
Updated on
1 min read

வெங்காயம் தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக அதிக வரு வாய் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒரு கிலோ சின்னவெங்காயம் மற்றும் பெரியவெங்காயம் ரூ.70-க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம் பட்டி, வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படு கிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வெங்காயச் சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்தது. இதையடுத்து வந்த வடகிழக்கு பருமழை தொடக்கத்தில் பலத்த மழை பெய்தநிலையில் வெங்காயப் பயிர்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது. இதில் தப்பிய வெங்காய பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

வெங்காயச் சாகுபடி பரப்பு குறைவு, தேவைக்கு ஏற்ப வெங்காயம் வரத்து இல்லாததால் அதன் விலை கடந்த ஒரு மாதமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற வெங்காய மார்க்கெட்களில் திண்டுக்கல் மார்க்கெட்டும் ஒன்று. திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் மூன்று நாட்கள் செயல்படும் இந்த மார்க்கெட்டுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காய வரத்து படிப்படியாக குறைந்துவருகிறது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையான சின்னவெங்காயம் தற்போது ரூ.70-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் பெரியவெங்காயத் தில் விலையும் தொடர்ந்து அதி கரித்து வருகிறது. வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அக் டோபரிலிருந்தே விலை அதிகரிக் கத் தொடங்கிய பெரிய வெங்காயம், தற்போது கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சின்னவெங்காயம் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால், விவ சாயிகளுக்கான வருவாய் அதி கரித்துள்ளது. இதனால், திண்டுக் கல் மாவட்டத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாததால் வெங்காயப் பயிர்கள் சேதத்தில் இருந்து தப்பி தற்போது அறுவ டைக்கு தயாராகிவிட்டன. சில இடங்களில் வெங்காய அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அறுவடை செய்யப் படும் வெங்காயம் மார்க்கெட்டுக்கு வந்தாலும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்காது என்பதால் விலை உயர்வு தொடரும் என்கின்றனர் வெங்காய வியாபாரிகள்.

- பி.டி.ரவிச்சந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in