Published : 19 Nov 2019 01:17 PM
Last Updated : 19 Nov 2019 01:17 PM

கொடைக்கானலில் நக்சலைட்கள் ஆயுத பயிற்சி வழக்கு: திண்டுக்கல் நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை தொடக்கம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பகத்சிங், கண்ணன், செண்பகவல்லி, லீமாஜோஸ்மேரி. படங்கள்: பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல் மலையில் நக்சலைட்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சாட்சிகள் விசாரணை தொடங்கியது. இதையொட்டி நக்சலைட்கள் ஆறு பேர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி பொய்யாவெளி என்ற இடத்தில் 2008-ம் ஆண்டு நக்சலைட்கள் சிலர் ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனப்பகுதியில் சோதனை நடத்திய போலீஸார் தர்மபுரியைச் சேர்ந்த நவீன்பிரசாத் என்பவரை சுட்டுக் கொன்றனர்.

இவருடன் இருந்த மற்றவர்கள் தப்பியோடினர். இவர்களில் ரஞ்சித், நீலமேகம், கண்ணன், பகத்சிங், லீமாஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, காளிதாஸ் ஆகியோர் பின்னர் கைது செய்யப்பட்டனர். வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகி வந்தனர். இதில் நீலமேகம், ரஞ்சித் ஆகியோர் ஜாமீனில் உள்ளனர். மற்ற நான்கு பேர் தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நேற்று தொடங்கியது. இவர்களில் காளிதாஸ் தவிர நான்கு பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதி மன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட னர். திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா முன்னிலையில் ஜாமீனில் இருந்த இருவரும் சேர்த்து ஆறு பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் காளிதாஸ் கேரள மாநிலத் தில் வழக்கு தொடர்பாக ஆஜராக வேண்டி இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

மொத்தம் 68 சாட்சிகள் விசா ரிக்கப்படவேண்டிய நிலையில், நேற்று முதல்சாட்சியாக இன்ஸ் பெக்டர் ஆறுமுகம் விசாரிக்கப்பட் டார். தொடர்ந்து திருச்சி பட்டாலியன் எஸ்.பி., ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ ஆகியோர் சாட்சியம் அளித்தனர். இவர்களை நக்சலைட் தரப்பு வழக்கறிஞர் கண்ணப்பன் குறுக்கு விசாரணை செய்தார்.

சாட்சிகள் விசாரணையை முன் னிட்டு என்கவுண்டரில் பயன்படுத் தப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங் கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டன. சாட்சிகளிடம் ஒரு வாரம் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது. விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த நக்சலைட் கண்ணன், மாவோயிஸ்ட்களை என்கவுண்டர் செய்த கேரள போலீஸாரைக் கண்டித்து கோஷம் எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x