

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பது பாஜகவின் கருத்து என்றார் பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன்.
கோவையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: முதல்வர் கே.பழனிசாமி தொடர் பாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் எந்த நேரத்தில், யாருக்கு பொறுப்பு கிடைக்கும் என்பது தெரியாது. நீண்டகாலம் மக்களுடன் தொடர் புடையவர்களுக்கு அரசியலில் இடம் உண்டு. நிலையற்ற தன்மை கொண்டது அரசியல். இதைத்தான் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்து குறிப்பிட்ட தனி நப ருக்கு எதிரானதல்ல. அரசியலில் அதிசயம் நிகழும் என்றுதான் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியோ, முடிவோ எப்படி இருக்கும் என்பதை காலம்தான் சொல்லும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு கருத்து இருக்கும். தமிழக அரசியல் ஆளுமையில் வெற்றிடம் இருக்கிறது என்பது பாஜகவின் கருத்து. வெற்றிடம் இல்லை என்பது அதிமுகவின் கருத்து. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.