ஏற்கெனவே போட்டியிட்டவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் முக்கியத்துவம்: தேமுதிக நிர்வாகிகளிடம் விஜயகாந்த் உறுதி

 ஏற்கெனவே போட்டியிட்டவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் முக்கியத்துவம்: தேமுதிக நிர்வாகிகளிடம் விஜயகாந்த் உறுதி
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்கெ னவே போட்டியிட்ட நிர்வாகி களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படும் என கட்சி நிர்வாகிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தல் நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்பு பவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.

சென்னை கோயம்பேட் டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகத்தை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 15-ம் தேதி தொடங்கிவைத்தார். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 32 மாவட்டங் களுக்கான தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்களுடன் விஜய காந்த் நேற்று ஆலோசனை நடத் தினார். கட்சித் தலைமை அலுவல கத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவர் வி.இளங்கோவன், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.

உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்வது குறித்தும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஒற்று மையாக பணியாற்றுவது குறித்தும் நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் அறிவுரைகளை வழங்கினார்.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

மாவட்ட வாரியாக நியமிக்கப் பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர் கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வரும் 25-ம் தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப் படைக்க வேண்டும்.

இந்த விருப்ப மனுக்களை சேகரித்த பிறகு, அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி, நமக்கான இடங்களை கேட்டுப் பெறலாம்.

திருப்பூர், திருச்சி மாநகராட்சி களுடன் 20 சதவீத இடங்களை அதிமுகவிடம் கேட்டுப் பெறு வோம். உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் நமக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கெனவே, தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகி களுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படும் என விஜயகாந்த் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in