தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2020 ஏப்ரலில் தொடக்கம்: களப்பணியாளர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சி
தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பு மற்றும் மக்கள் தொகை பதிவேட்டை சரிசெய்யும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்கு நரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் நாடு முழுவதுக்குமான ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, கடந்த 1881-ம் ஆண்டு நடத்தப் பட்டது.
சுதந்திரத்துக்குப்பின் அரசியல மைப்பு சட்டவிதிகள்படி 10 ஆண்டு களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி வரும் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள கணக்கெடுப்பு 8-வது கணக்கெடுப் பாகும். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரிபார்த்தல் பணி, வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக்கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என 2 கட்டங்களாக நடத்தப் படுகிறது.
வீட்டுப்பட்டியல், வீட்டுக்கணக் கெடுப்பின்போது மாநிலம், யூனியன் பிரதேசங்களின் உள்ளூர் நிலைமைகள் அடிப்படையில் 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீட்டின் நிலை, குடும்பங்களுக்கு கிடைக் கும் வசதிகள் மற்றும் சொத்துகள் போன்றவை அடையாளம் காணப் பட்டு அட்டவணையில் பட்டிய லிடப்படும்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்காக கடந்த 2010-ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட்டது. இப்பதிவேடுக்கான தரவு, கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமான வீட்டுப்பட்டியல், வீடுகள் கணக் கெடுப்புடன் சேர்த்து சேகரிக்கப் பட்டது. மேலும், கடந்த 2015-16-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டின் தரவு தளமும் சரிசெய்யப்பட்டது.
தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை தேசிய மக்கள் தொகை பதி வேட்டின் தரவுதளத்தை அந்நாள் வரை சரி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
களப்பணியில் தகவல் சேகரிக்க முதல்முறையாக கைபேசி செயலி பயன்படுத்தப்பட உள்ளது. இப் பணியை கண்காணிக்க வலை தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பணிக்காக டெல்லி யில் உள்ள இந்திய தலைமை பதி வாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவ லகத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாடு மக்கள் தொகை இயக்குநரக தேசிய பயிற்சியாளர்கள் மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சியகத்தின் தேசிய பயிற்சி யாளர்களால் முதன்மை பயிற்சி யாளர்களுக்கு பயிற்சியளிக்கப் படுகிறது. அதன்படி அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி நேற்று தொடங்கியது. இது, வரும் நவ.23-ம் தேதி வரையும் பின்னர் டிசம்பர் 2 முதல் 7-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
இதில் பயிற்சிபெற்ற முதன்மை பயிற்சியாளர்கள், களப்பயிற்சி யாளர்களுக்கு பயிற்சி அளிப் பார்கள். களப்பயிற்சியாளர் கள் பின்னர் கணக்கெடுப்பா ளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
