உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நவ.21 முதல் காங்கிரஸார் விருப்ப மனு அளிக்கலாம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நவ.21 முதல் காங்கிரஸார் விருப்ப மனு அளிக்கலாம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்த பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம் உருவாக்கப்பட்டது. நாடாளு மன்றம், சட்டப்பேரவைக்கு அடுத்து உள்ளாட்சி மன்றங்களும் சட்ட வடிவம் பெற்றன. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர் தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் 2016-ல் நடந்திருக்க வேண்டிய உள்ளாட் சித் தேர்தல், 3 ஆண்டுகளாக நடக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்துவ தற்கான பணிகளை மாநில தேர் தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதுபோன்ற முடிவை எடுக்க அதிமுக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்ச நீதி மன்றத்தில் எந்த அடிப்படையில் தேர்தலை நடத்துவோம் என்று தேர்தல் ஆணையம் உறுதி கூறி யதோ, அந்த அடிப்படையிலேயே நடத்த வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்ள காங்கிரஸ் தயாராக உள் ளது. தேர்தலில் போட்டியிட விரும் பும் காங்கிரஸ் கட்சியினர் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனு அளிக்கலாம்.

விருப்ப மனுவுடன் மாநகராட்சி மேயருக்கு ரூ.10 ஆயிரம், மாந கராட்சி வார்டு உறுப்பினர், பேரூ ராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு ரூ.3 ஆயிரம், நகராட்சித் தலைவருக்கு ரூ.5 ஆயிரம், நகராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு ரூ.2 ஆயிரம், பேரூ ராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண் டும். ஆதிதிராவிடர், பெண்கள் இதில் 50 சதவீதம் கட்டணம் செலுத் தினால் போதுமானது. பெறப்பட்ட விருப்ப மனுக்களை வரும் 26-ம் தேதி மாநில தலைமை அலு வலகத்தில் நடக்கும் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in