எஸ்சி, எஸ்டி ஊழியர் குறைதீர் மையம் மாநகராட்சி அமைக்க வேண்டும்: தேசிய எஸ்சி ஆணையம் அறிவுறுத்தல்

எஸ்சி, எஸ்டி ஊழியர் குறைதீர் மையம் மாநகராட்சி அமைக்க வேண்டும்: தேசிய எஸ்சி ஆணையம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் எஸ்சி, எஸ்டி ஊழியர் குறைதீர் மையங்களை அமைக்க வேண்டும் என்று தேசிய எஸ்சி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேசிய எஸ்சி ஆணையம் சார்பில் சென்னை மாநகராட்சி எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கான குறைதீர் முகாம், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் தேசிய எஸ்சி ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் பங்கேற்று மாநகராட்சியில் உள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள், எஸ்சி ஊழியர்கள் ஆகியோரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலா ளர்கள் ஆணைய துணைத் தலைவரிடம் கூறியதாவது:

வார்டுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வார்டு அலுவ லகங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. தற்காலிக தொழிலாளர் களுக்கு பிற மாநகராட்சிகளில் ரூ.500-க்கு மேல் தினக்கூலி வழங்கப்பட்டு வரும் நிலையில், இங்கு ரூ.379 மட்டுமே வழங்கப் படுகிறது. தற்காலிக தொழிலாளர் களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு தேவை யான மழை கோட், சீருடை, காலணி, சோப்பு போன்றவை காலம் தாழ்த்தாது வழங்க வேண்டும். ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழி லாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.

பின்னர் ஆணைய துணைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் பணி புரியும் எஸ்சி, எஸ்.டி. தொழிலா ளர்களின் புகார்கள் மீது தீர்வுகாண மாநகராட்சி மண்டல அளவில் எஸ்சி, எஸ்டி தொழிலாளர் குறைதீர் மையத்தை ஏற்படுத்தி, புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான காலி பணியிடங்களை உடனே நிரப்ப வும், ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சமி நில விவகாரம்

பஞ்சமி நிலத்தில் ‘முரசொலி’ அலுவலகம் அமைக்கப்பட்டுள் ளதாக வந்த புகாரின் பேரில், நாளை (நவ.19) விசாரணை நடைபெற உள்ளது. அதில் அவர்கள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு ஆவணங்களின்படி 1 லட்சத்து 86 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலமாக உள்ளது. இதில் சுமார் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக ஆணைய விசாரணயில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், இணை ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர் பா.மதுசூதன் ரெட்டி, பி.குமாரவேல் பாண்டியன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in