

கரூர் கொசுவலை நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் 4 நாட்கள் நடத்திய சோதனையில் ரூ.435 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந் நிறுவன உரிமையாளரின் வீட்டில் இருந்து ரூ.32.60 கோடி ரொக்கம், 10 கிலோ தங்க நகைகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.
கரூர் ராம் நகரைச் சேர்ந்தவர் சிவசாமி. இவர், கரூர் வெண்ணெய் மலையில் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற பெயரில் கொசுவலை ஏற்று மதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் கரூர் அருகே ஆத்தூர் சிப்காட் மற்றும் தண்ணீர்ப் பந்தல் ஆகிய இடங்களில் உள்ளன. இந்நிறுவனத்துக்கான ஜாப் வொர்க் பல்வேறு இடங்களில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வ தாக வந்த புகாரை அடுத்து, கடந்த நவ.15-ம் தேதி கரூர், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள் ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சிவசாமியின் வீடு, நிறுவனம், தொழிற்சாலை ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண் டனர். சோதனையின் 2-ம் நாளன்று (நவ.16) சிவசாமியின் வீட்டில் இருந்து ரூ.32.60 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
போலி ஆவணங்கள் தாக்கல்தொடர்ந்து 3-வது நாளாக நேற்று முன்தினம் இந்நிறுவனத்துக்கு ஜாப் வொர்க் நடைபெறும் இடங்கள் உட்பட மொத்தம் 20 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில் வரவு-செலவு கணக்குகள் தாக்கலில் போலியான ஆவணங்கள் தயாரித்து பல்வேறு முறைகேடுகளில் இந் நிறுவனம் ஈடுபட்டது கண்டறியப் பட்டது.
மேலும், கணக்கில் காட்டப்படாத வருமானம் மூலம் பல்வேறு அசையா சொத்துகள் இந்நிறுவனத்துக்கு வாங்கப்பட்டதும், பங்குச்சந்தை, நிரந்தர வைப்புத்தொகை பல்வேறு இனங்களில், இந்த நிறுவனத் தின் வருவாய் முதலீடு செய்யப் பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. இவ்வாறாக ரூ.435 கோடி மதிப்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண் டறியப்பட்டது.
சோதனை நிறைவுஇதையடுத்து, வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல்வேறு ஆவணங்கள், நிறுவனரின் வீட்டில் இருந்து 10 கிலோ தங்க நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை முடித்ததை அடுத்து, வருமான வரி சோதனை நேற்று மதியம் நிறைவடைந்தது.
20 கார்களில் 80 அதிகாரிகள்தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 20 வாகனங் களில் வந்திருந்த 80-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சிவசாமியின் வீடு, ஏற்றுமதி நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் ஜாப் வொர்க் நடைபெற்ற நிறுவனங்களில் கடந்த 4 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டது கரூரில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் 4 நாட் களும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.