Last Updated : 18 Nov, 2019 05:39 PM

 

Published : 18 Nov 2019 05:39 PM
Last Updated : 18 Nov 2019 05:39 PM

மதுரை மேயர் ‘சீட்’  தேமுதிகவுக்கு ஒதுக்க அதிமுகவிடம் வலியுறுத்துவோம்: தொழிற் சங்க நிர்வாகிகள் தகவல்

மதுரை

மதுரை மாநகராட்சி மேயர் சீட்’ டை தேமுதி கவுக்கு ஒதுக்க, கூட்டணி கட்சியான அதிமுகவி டம் வலியுறுத்துவோம் என, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகளில் அரசு ஈடுபடுவதால், அரசியல் கட்சியினரும் தங்களுக்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆங்காங்கே ஆலோசனை, கலந்தாய்வுக் கூட்டங்கள் மூலம் தொண்டர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.

தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் மனுக்களைப் பெறுகின்றனர். மூத்த நிர்வாகிகள் இளைய நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து, விருப்ப மனுக்களை கொடுக்கச் செய்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு கட்சியிலும் குறிப்பிட்ட நிதி திரட்டுவதிலும் மும்மரம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே தங்களது கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் ‘ சீட்’ குறித்த கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்கவேண்டும் என, சில கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன.

அதிமுக கட்சித் தலைமை தங்களது கூட்டணியிலுள்ள கட்சிகளுடன் பங்கீடு குறித்து பேசுவதற்கு குழுக்களை நியமிக்க, ஆர்வம் காட்டி உள்ளனர்.

அந்த வரிசையில் தேமுதிக கட்சியும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறது. கூட்டணி கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்த முதலில் குழு ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறதாம். அவர்களும் விருப்ப மனுக்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

மதுரை தெற்கு, வடக்கு, புறநகர் வடக்கு, தெற்கு என, பிரித்து, கட்சியின் தலைமை அலுவலகம், மாவட்ட செயலர் அலு வலகங்களில் விருப்ப மனுக்களை நேற்று முன்தினம் முதல் வாங்குகின்றனர். மதுரையில் நவ., 25ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் மதுரையில் தேமுதிகவினர் விறுவிறுப்பாக தேர்தல் பணியை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சி மேயர் பதவிகளில் அதிமுக கூட்டணியில் மதுரையை தேமுதிகவுக்கு கேட்க கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளது என்றும், நாங்களும் தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பு இருப்பதாகவும் மதுரை தேமுதிக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கட்சியின் தொழிற் சங்க பொருளாளர் முஜூபுர் ரகுமான் கூறியது:

தமிழக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை நாங்களும் தொடங்கிவிட்டோம். தமிழகம் முழுவதும் மாவட்ட செயலர் அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் பெறுவதைத் தொடர்ந்து மதுரையிலும் நவ.,17ல் முதல் மனுக்கள் பெறுகிறோம்.

நிர்வாகி கள், தொண்டர்கள் ஆர்வமுடன் மனுக்களைக் கொடுக்கின்றனர். ஒருசிலர் மேயர் பதவிக்கும் விருப்ப மனுக்கள் தருகின்றனர்.

தமிழக அளவில் 30 சதவீத உள்ளாட்சி பதவிகளுக்கான இடங்களை எங்களுக்கு ஒதுக்க அதிமுகவிடம் கேட்க தலைமை முடிவெடுத்துள்ளது. மதுரையிலும் அது கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். கேப்டனின் உடல்நிலை தேறுகிறது. உறுதியாக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொடண்டர்கள், நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x