Published : 18 Nov 2019 04:17 PM
Last Updated : 18 Nov 2019 04:17 PM

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட திமுக முன்னாள் எம்எல்ஏ., தளபதியின் மகள் விருப்ப மனு: சீட் யாருக்கு என கட்சிக்குள் சலசலப்பு 

மதுரை

மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் மாநகர் பொறுப்புக் குழு தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கோ.தளபதியின் மகள் மேகலா தளபதி இன்று (நவ.18) விருப்ப மனு கொடுத்தார்.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற வழக்குகளைக் கடந்து உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. உள்ளாட்சித் தேர்தலை டிசம்பரில் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது.

முக்கிய அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், திமுக சார்பில் மாநகர் பொறுப்புக் குழு தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கோ.தளபதியின் மகள் மேகலா தளபதி இன்று (நவ.18) மனு தாக்கல் செய்தார்.

ஏற்கெனவே இத்தேர்தலில் போட்டியிட மாநகர் பொறுப்புக் குழு உறுப்பினர் சின்னம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் நரேந்திரன், நாகனாகுளம் முன்னாள் கவுன்சிலர் சசிக்குமாரின் மனைவி வாசுகி ஆகியோர் விரும்ப மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் வாசுகிக்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளார் மூர்த்தி ஆதரவும் உள்ளது.

இந்நிலையில் மாநகர் பகுதி சார்பில் தளபதி தனது மகளையே வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இருவருமே கட்சி செல்வாக்கு கொண்டவர்கள் என்பதால், மதுரை மேயர் பதவிக்கு போட்டியிட சீட் தளபதி மகளுக்கா அல்லது முன்னாள் கவுன்சிலர் சசிக்குமாரின் மனைவிக்கா என்று கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளருக்கான விருப்ப மனுவை மேகலா தளபதி மாநகர் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் கோ. தளபதியிடம் இன்று (திங்கள்கிழமை) அளித்தார்.

அப்போது அவருடன் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ. வேலுசாமி பெ. குழந்தைவேலு பொண். சேதுராமலிங்கம் மற்றும் திரளான கழக நிர்வாகிகள் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x