Published : 18 Nov 2019 04:59 PM
Last Updated : 18 Nov 2019 04:59 PM

ஜிஎஸ்டி முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: ராஜ்குமார் பர்த்வால்

ஜிஎஸ்டி தற்போது முழுமையாக வடிவமைக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் உறுப்பினர் ராஜ்குமார் பர்த்வால் தெரிவித்துள்ளார்.

ஆசிய பசிபிக் துணைநாடுகள் பங்கேற்கும் 29-வது உலக அளவிலான சுங்க குழுமத்தின் மாநாடு புதுச்சேரியில் இன்று (நவ.18) தொடங்கியது. புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் மாநாட்டில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஈரான், கம்போடியா, ஹாங்காங் உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த மூத்த சுங்க அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டம் தொடர்பாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் உறுப்பினர் ராஜ்குமார் பர்த்வால் செய்தியாளர்களிடம் இன்று (நவ.18) கூறுகையில், "வளர்ந்து வரும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வரி வசூல் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூல் கிட்டத்தட்ட முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப சிறப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி என்பது உலகில் நிகழ்ந்த ஒரு வகையான உருமாறும் வரி விதியாகும். பொருளாதார நிலைமைக்கு தேவைப்படுவது போல இதுவும் சிறப்பாக தற்போது வடிவமைக்கப்பட்டு விட்டது," எனத் தெரிவித்தார்.

சுங்கத்துறை ஆணையர் பார்த்திபனிடம் கேட்டதற்கு, "இந்தியாவில் ஜெய்ப்பூர், கொச்சின் போன்ற இடங்களையடுத்து 4-வது முறையாக புதுச்சேரியில் இம்மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் முக்கியமாக சுங்கத்துறையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை எளிதாக்குவது போன்றவை இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகின்றன. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்ற நடைமுறைகளை எளிதாக்க உள்ளனர்" என்று தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x