

விஷம் குடித்த பெண்ணை தனது மொபெட்டில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிய பெண் காவலருக்குப் போலீஸார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியா பட்டியில் இருந்து 2 நாட்களுக்கு முன் நரிக்குடி சென்ற அரசு பஸ்ஸில் ஒரு பெண் விஷம் குடித்து மயக்கம் அடைந்தார். இதை அறிந்த பயணிகள் பேருந்தை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் செல்லுமாறு கூறினர்.
ஆனால், விஷம் குடித்த பெண் பேருந்தில் இருந்து இறங்க மறுத்தார். அதையடுத்து, காரியா பட்டி காவல் நிலையத்துக்கு பேருந்தை ஓட்டிச் சென்று விஷம் குடித்த பெண்ணை ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் இறக்கி விட் டனர்.
அப்போது காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர் தவமணி விசாரித்தார். இதில், விஷம் குடித்த பெண் தோணுகாலைச் சேர்ந்த வெற்றிவேல் என்பரது மனைவி மஞ்சுளா(28) என்பதும், குடும்பப் பிரச்சினையில் விஷம் குடித்ததும் தெரிய வந்தது.
அதையடுத்து அவருக்கு பெண் காவலர் தவமணி முதலுதவி செய்துள்ளார். பின்னர் 108 ஆம்புலன்ஸை அழைத்தபோது, வர தாமதமாகும் எனத் தெரிவித் தனர். இதையடுத்து மஞ்சுளாவை தனது மொபெட்டில் அழைத்துச் சென்று காரியாபட்டி அரசு மருத்து வமனையில் சரியான நேரத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இதை அறிந்த சக போலீஸார் மற்றும் பொதுமக்கள், பெண் காவலர் தவமணிக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் தவமணிக்கு பரிசு வழங்கு வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.