வெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை லேசான மழைப் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்:

“வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை லேசான மழைப் பெய்யும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு தரங்கம்பாடி -3 செ.மீ. பாபநாசம் -2 செ.மீ., சிவகிரி -2. செ.மீ., தென்காசி -2 செ.மீ. ஆகும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 34°செல்ஷியஸ் இருக்கும் எனவும் குறைந்தபட்சமாக 26°செல்ஷியஸ் இருக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in