

ஆடுகள் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது, வங்கிக்கு பல கோடி ரூபாயுடன் வந்த கன் டெய்னர் லாரி குளத்தில் கவிழ்ந் தது. விடிய விடிய பெரும் முயற் சிக்கிடையே லாரியில் இருந்த பணம் முழுவதுமாக மீட்கப்பட்டது.
மைசூர் அருகில் உள்ள நஞ் சங்கூடு பகுதியில், இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையத்தில் இருந்து திருவனந்த புரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு பல கோடி ரூபாய் நோட்டுகள் 3 கன்டெய்னர் லாரிக ளில் அனுப்பி வைக்கப்பட்டன. லாரிகளின் முன்னும், பின்பும் துணை ராணுவப் படையினர் பாது காப்புக்காக வந்தனர்.
நேற்றுமுன்தினம் மதியம் 1 மணி அளவில் லாரிகள் நாகர்கோவில் அடுத்த தேரேகால்புதூர் பகுதியில் வந்தபோது ஒரு லாரியின் குறுக்கே ஆடுகள் ஓடின. ஆடுகள் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோர மின் கம்பத்தில் மோதி, அதே வேகத்தில் சாலை யோர தூர்ந்துபோன குளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
கன்டெய்னர் தனியாகவும், இன்ஜின் பகுதி தனியாகவும் முறிந்தன. கன்டெய்னரை சுற்றி துணை ராணுவப் படையினர் பாது காப்புக்காக நின்றனர். கவிழ்ந்த லாரியுடன் வந்த மற்ற 2 லாரிகளும் உடனே திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கன்டெய்னரில் கோடிக்கணக் கான ரூபாய் பணம் இருப்ப தாக தகவல் கசிந்ததும் பொது மக்கள் அங்கு திரண்டனர். பாது காப்புக்காக மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. மையத்தில் இருந்து கூடுத லாக துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர் களும், போலீஸாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், மீட்பு பணி வீரர்களும் அங்கு வர இரவாகி விட்டது. இதனால் லாரி யைச் சுற்றி ஜெனரேட்டர் வைக்கப் பட்டு மின்விளக்கு வசதி செய்யப் பட்டது. ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தொடங்கியது. ஆனால் லாரியையும், கன்டெய்னரையும் குளத்தில் இருந்து வெளியே மீட்க முடியவில்லை. இதையடுத்து கேரளாவில் இருந்து 3 கன்டெய்னர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. குளத்தில் கிடந்த லாரியில் இருந்த பணப்பெட்டிகள் ஒவ்வொன்றாக மாற்று லாரிகளில் ஏற்றப்பட்டன. இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்த பணி விடிய விடிய நடந்தது.
கன்டெய்னர் லாரியில் இருந்த 200-க்கும் அதிகமான பணப் பெட்டிகளை 3 லாரிகளிலும் ஏற்றினர். நேற்று காலை 7 மணி வரை இந்த பணி நடந்தது.
குளத்தில் கவிழ்ந்த லாரியில் இருந்த பணம் 19 மணி நேரத்துக்கு பிறகு முழுவதுமாக மீட்கப்பட்டது. பணம் ஏற்றப்பட்ட 3 லாரிகளையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவனந்தபுரம் கொண்டு சென்றனர். அதன் பின்னர் விபத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது.