

வேளாங்கண்ணியில் இருதரப்பினர் சொந்தம் கொண்டாடும் காலி மனையில் தலை இல்லாத புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. வரு வாய்த் துறையினர் சிலையை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்ட னர். இதனால், அங்கு பாதுகாப்புக் காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங் கண்ணி கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(63). இவரது வீட்டுக்கு பின்புறம் 5 சென்ட் காலி மனை முட்புதர்கள் மண்டிய நிலை யில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த இடத்தை முஸ்லீம் ஜமாஅத் அமைப்பினரும், இந்து அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வந்தன.
இந்நிலையில், அந்த இடத்தில் முஸ்லிம் ஜமாஅத் அமைப்பினர் நேற்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த இடத்தில் 3 அடி உயரம் கொண்ட தலை இல்லாத கருங்கல் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று ஜமாஅத் அமைப் பினர் கூறினர். இதுகுறித்து அறிந்த பாஜகவினர் அந்த சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப் போவ தாக வாட்ஸ்அப் மூலம் தங்கள் ஆதரவாளர்களுக்கு செய்தி பரப்பி னர்.
இரு தரப்பினரும் அந்த இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தகவல றிந்த வருவாய்த் துறையினர் அங்கு வந்து, 1935-ம் ஆண்டு அரசு பதிவேட்டின்படி, சிலை கண்டெடுக் கப்பட்ட இடம் யாருக்கும் சொந்தம் இல்லை என்று கூறினர்.
ஆனால், ஜமாஅத் அமைப்பினர் அந்த இடம் 2004-ம் ஆண்டு முதல் ஜமாஅத் அமைப்பினருக்கு சொந்த மானதாக பதிவு செய்யப்பட்டுள் ளதாக கூறினர். சிலை இருக்கும் இடம் எப்படி முஸ்லிம்களுக்கு சொந்தமானதாக இருக்க முடியும் என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித் ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கீழ்வேளூர் வட் டாட்சியர் கபிலன் தலைமையிலான வருவாய்த் துறையினர் அங்கிருந்த சிலையை கைப்பற்றி, கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரி வித்தனர். சிலை ஏற்றப்பட்ட வாகனத்தை வேளாங்கண்ணி ஆர்ச் அருகே மோட்டார் சைக்கிள்களில் வந்த பாஜகவினர் மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியல் செய்த 50-க்கும் மேற்பட்ட பாஜகவி னரை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து, வேறு ஒரு வாகனம் மூலம் சிலை கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.