Published : 18 Nov 2019 10:17 AM
Last Updated : 18 Nov 2019 10:17 AM

கட்சி வளர்ச்சிக்காக குடும்பமாக உழைத்து தியாகம் செய்தவர்கள் திமுகவினர்: வீரபாண்டி ஆறுமுகம் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் கருத்து

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’ என்ற நூலை சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட, துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பெற்றுக் கொண்டார். உடன் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா உள்ளிட்டோர். படம்:எஸ்.குரு பிரசாத்

சேலம்/கோவை

திமுகவை குடும்ப அரசியல் என்று விமர்சிப்பவர்கள், திமுகவில் உள்ள அனைவரும் குடும்பத்துடன் பல இன்னல்களை அனுபவித்து, உழைத்தவர்கள் என்பதை உணர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலத்தில், திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்று குறிப்புகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட, ‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’ என்ற நூலை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நாட்டில் எதை விவாதிப்பது என்ற விவஸ்தையே இல்லை. மிசா வின்போது ஸ்டாலின் சிறை சென் றாரா? இல்லையா? என்றெல்லாம் விவாதம் எழுப்பி, சர்ச்சையை கிளப்புகின்றனர். இதெல்லாம் விவாதிக்கக் கூடிய விஷயமா? மிசாவின்போது நான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை நிரூபிக்க வேண்டும் என சொல் வதற்கு வெட்கப்படுகிறேன்.

மிசாவை எதிர்த்ததால், திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தமிழகம் முழுவதும் திமுகவினர் கைது செய் யப்பட்டனர். வீரபாண்டி ஆறுமுகம், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் என குடும்பத்தினர் அனைவ ருமே கைது செய்யப்பட்டனர். அவரது குடும்பத்தினர் அனைவரும் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டனர். திமுகவை சிலர் குடும்ப அரசியல் செய்வதாக விமர்சிக்கின்றனர். இப்படி, குடும்பமாக உழைத்து தியாகம் செய்தவர்கள்தான் திமுக வினர் என்றார்.

காலிழந்த பெண்ணுக்கு ஆறுதல்

கோவை கோல்டுவின்ஸ் அருகே கடந்த 11-ம் தேதி விபத்தில் சிக்கி, கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரி என்ற அனுராதா(30), அவரது குடும் பத்தினரை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். திமுக சார்பில் மருத்துவச் செலவுக்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, ராஜேஸ்வரியின் பெற்றோரிடம் வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்த தில் ராஜேஸ்வரி காயமடைந் துள்ளார். இவ்விபத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள் ளார். கொடிக்கம்பம் வைத்த அதிமுகவினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ராஜேஸ்வரிக்கான மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x