இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆத்தூர் அருகே விபத்தில் தாய், மகள், மகன் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆத்தூர் அருகே விபத்தில் தாய், மகள், மகன் உயிரிழப்பு
Updated on
1 min read

ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில், தாய், மகள், மகன் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கெங்கவல்லியைச் சேர்ந்த வர் சின்னதம்பி(48), மின் வாரியத் தில் பணிபுரிகிறார். இவரது மனைவி சந்திரா(35), மகள் நித்யா(17), மகன் சக்திவேல்(15). சந்திரா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக, வீரகனூரை அடுத்த வெள்ளையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

சந்திராவின் மகள் சித்ரா, ஆத்தூரை அடுத்த தேவியாக்குறிச் சியில் உள்ள தனியார் கல்லூரி முதலாமாண்டு பட்டப் படிப்பும், மகன் சக்திவேல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில், குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்ததால், சந்திரா தனது கணவரைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் தனது மகள், மகனு டன் நேற்று அதிகாலை புறப்பட் டார்.

பேருந்து மோதியது

வீரகனூரை அடுத்த தெடாவூர் காமராஜ் நகர் பகுதியில் வந்த போது, அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியது. இதில், சந்திரா, நித்யா, சக்தி வேல் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீ ஸார் விசாரித்து, தனியார் பேருந் தின் ஓட்டுநரான தெடாவூரைச் சேர்ந்த அருணகிரி (37) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in