நீலகிரி மாவட்டத்தில் கனமழை: குன்னூரில் பல இடங்களில் மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள் 

நீலகிரி மாவட்டத்தில் கனமழை: குன்னூரில் பல இடங்களில் மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள் 
Updated on
1 min read

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நள்ளிரவில் பெய்த கனமழையால் குன்னூர் மலைப்பாதையில் மரங் கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து இடங்க ளிலும் போக்குவரத்து தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டது.

குன்னூரில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் தரைப்பாலம் உடைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. தரைப் பாலத்தில் ஜீப் ஒன்று சிக்கிக் கொண்டதால் குடியிருப்புப் பகுதிக ளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆற்றோ ரம் உள்ள சாலையும் சேதமடைந் தது.

தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு அதிகாரி சந்திரபோஸ் தலைமை யில் 40 பேர் கொண்ட குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை மழை குறைந்த பின்னரே மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடிந்தது.

மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நான்சச் எஸ்டேட் செல்லும் சாலை யில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் மற்றும் பாறைகள் சாலையில் விழுந்தன. தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தலைமையில் மண் சரிவு அகற்றும் பணி நடந்தது.

மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால், நேற்று காலை 7 மணி முதல் இங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் மற்றும் உதகை யில் இருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி மார்க்கமாக திருப்பி விடப்பட்டன. சீரமைப்புப் பணிகள் முடிந்ததும் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

கிருஷ்ணாபுரம் பகுதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் காரணமாக கடந்த 2015-ல் பெய்த கனமழையின் போதும், வெள்ளப்பெருக்கு ஏற் பட்ட பல வானகங்கள் அடித்து செல் லப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிளீன் குன்னூர் என்ற அமைப்பு பொது மக்களுடன் இணைந்து இந்த ஆற்றை தூர்வாரியதால் தற்போது பாதிப்பின் அளவு குறைந்துள்ள தாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in