Published : 18 Nov 2019 10:00 AM
Last Updated : 18 Nov 2019 10:00 AM

உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது திமுகவிடம் அதிக இடங்களை காங்கிரஸ் பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரியிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் அதிக இடங்களை கேட்டுப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற் றது. தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்களான அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், வல்லபிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர்கள் சு.திருநாவுக் கரசர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், எம்.கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை தலைவர் கே.ஆர்.ராமசாமி, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மாநில செயல் தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, மாநில இளைஞரணித் தலைவர் ஹசன் மவுலானா உள்ளிட்ட மாநில தேர்தல் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய அனை வரும், ‘திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட் டணியில் காங்கிரஸ் மிக முக்கிய மான கட்சி என்பதால், திமுகவிடம் அதிகமான இடங்களை கேட்டுப் பெற வேண்டும். குறைந்தது 2 மாநகராட்சி மேயர் பதவிகளையும் சென்னை மாநகராட்சியில் அதிகமான மாமன்ற உறுப்பினர் இடங்களை கேட்டுப் பெற வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தொகுதிப் பங்கீட்டு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முடிவெடுப்போம். வெற்றி வாய்ப்புள்ள இடங்கள், போட்டி யிட விரும்புவோரின் பட்டியலை அனுப்புமாறு மாவட்டத் தலைவர் களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

பஞ்சமி நிலம்

பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை ஆகியவற்றுக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்து வரும் 30-ம் தேதி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் அல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து விட்டார். ஆளும் அரசு நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் நோட்டீஸ் அனுப்பலாம். இதில் வேறு எதுவும் முக்கியத்துவம் இல்லை. பாஜக தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ப.சிதம்பரத்தை கடந்த 89 நாட்களாக விசாரணை கைதியாகவே வைத்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x