

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) செயலாளர் ரஜினீஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் செயல்பாட்டை தடுப்பதற்கான வழிகாட்டுதலை யுஜிசி ஏற் கெனவே உருவாக்கியுள்ளது. அதன்படி, கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு மையம் அமைத் தல், முக்கிய இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்து தல் போன்ற பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது.
ராகிங் கொடுமையால் பாதிக் கப்படும் மாணவர்கள் புகார் தெரி விக்க தேசிய அளவிலான 1800-180-5522 என்ற இலவச தொலைபேசி எண் அமைக்கப்பட்டுள்ளது. ராகிங் அச்சுறுத்தல்களை முழுமையாக கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை களை மாநில அரசுகள் முன் னெடுக்க வேண்டும். அதன்மூலம் ராகிங் இல்லாத மாநிலம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.