Published : 18 Nov 2019 09:45 AM
Last Updated : 18 Nov 2019 09:45 AM

பிரச்சினைகளை பார்த்து பயப்பட கூடாது; இளைய தலைமுறையினர் வாழ்ந்துகாட்ட வேண்டும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை அறிவுரை

சென்னை

இளைய தலைமுறையினர் வாழ்ந் துகாட்ட வேண்டுமே தவிர, வீழ்ந்துபோகக் கூடாது என்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித் தார்.

சென்னையை சேர்ந்த ‘ஃப்ரீடம் ஃப்ரம் கேன்சர் ரிலீஃப் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன்’, இந்திய மருத் துவ சங்கம் சார்பில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு பாராட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று மாலை நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்தரராஜனை தமிழக முன்னாள் சுகாதார அமைச் சர் எச்.வி.ஹண்டே, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் மயில்வாகனன் நடராஜன், டி.ராஜா, மியாட் மருத் துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ், ஃப்ரீடம் ஃப்ரம் கேன்சர் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் அனிதா ரமேஷ், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் சிஎம்கே ரெட்டி உள்ளிட் டோர் பாராட்டினர். ‘‘காங்கிரஸ் கொடியில் பூத்த தாமரை மலரே’’ என்ற வாழ்த்துக் கவிதையை டாக்டர் ஒருவர் வாசித்தார். விழாவில் தமிழிசை பேசியதாவது:

நான் சார்ந்த மருத்துவத்துறை யினரிடம் இருந்து வாழ்த்து களைப் பெறுவது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. மருத்துவ ராக இருந்து அரசியல்வாதியாக மாறுவது சாதாரண விஷயம் அல்ல. மருத்துவமனையில் மருத்து வராக இருக்கும்போது தலையில் கிரீடம் வைத்ததுபோல இருக்கும். அந்த கிரீடத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு சாதாரண தொண்ட ராகத்தான் கட்சி அலுவலகத்துக்கு செல்வேன்.

எப்போதும் எளிமையாக இருக் கவே விரும்புகிறேன். தெலங்கானா வில் ஆளுநர் மாளிகையை மக்கள் வந்து செல்லும் இடமாக மாற்றி உள்ளேன். முழு ஈடுபாட்டோடு ஒரு பணியை செய்தால், அது நமக்கு முழுமையான பலனைத் தரும். உழைப்புதான் நம்மை உயர்த்தும்.

வாழ்க்கையில் பிரச்சினை இல் லாதவர் யாரும் இல்லை. பிரச் சினைக்கு பயந்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று எத்தகைய சூழ்நிலையிலும் நினைக்கக் கூடாது. வாழ்வதற்கு தான் இந்த வாழ்க்கை. கர்ப்பிணி யின் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்க்கும்போது, 2 செ.மீ. நீளம் மட்டுமே இருக்கும் குழந்தைக்கு இதயத் துடிப்பு இருக்கும். அது தாய்க்கு அவ்வளவு மகிழ்ச்சி தரும். அந்த துடிப்பை நிறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. இளைய தலைமுறை வாழ்ந்துகாட்ட வேண்டுமே தவிர, ஒருபோதும் வீழ்ந்துபோகக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x