அலுவலக நேரங்களில் கூடுதலாக வசூலிப்பு: கால்டாக்ஸி கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் - மீட்டர் பொருத்தவும் பொதுமக்கள் கோரிக்கை

அலுவலக நேரங்களில் கூடுதலாக வசூலிப்பு: கால்டாக்ஸி கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் - மீட்டர் பொருத்தவும் பொதுமக்கள் கோரிக்கை
Updated on
1 min read

அலுவலக நேரங்களில் கூடுதல் கட்டணமும் மற்ற நேரங்களில் ஒரு மாதிரியாகவும் என முறை யற்ற வகையில் கட்டணம் வசூலிப் பதால் கால்டாக்ஸி கட்டணங் களை அரசே நிர்ணயம் செய்து மீட்டர் பொருத்த உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 25 நிறுவனங் கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்டாக்ஸிகளை இயக்குகின் றன. மக்கள் சொகுசாக பயணம் செய்யும் வகையில் நேரடியாகவும் போன் மூலமும் இன்டெர்நெட் மூலமும் வாகனங்களை அழைக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் பல ஆயிரக் கணக்கான மக்கள் தினமும் பயணிக்கின்றனர். குறிப்பாக சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் அலுவலக நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க இது போன்ற கால்டாக்ஸிகளை பயன் படுத்தி வருகின்றனர். ஆனால், ஆட்டோக்களுக்கு இருப்பது போல், எந்த விதி முறைகளும் வகுக்கப்படவில்லை. இதனால், கால்டாக்ஸி நிறுவனங் கள் அடிக்கடி கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றன.

இதேபோல், அலுவலக நேரத் தில் அதிகமாகவும் மற்ற நேரங் களில் ஒரு மாதிரியான கட்டண மாகவும் வலிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ள னர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘பெரிய நகரங்களில் பொது போக்குவரத்து வசதி போதிய அளவில் இல் லாததால், மக்கள் தனியார் கால் டாக்ஸிகளை நாடுகின்றனர்.

டிஜிட்டல் மீட்டர்

இதை வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டு அடிக்கடி கட்ட ணத்தை உயர்த்தி வசூலிக்கின் றனர். அரசு கட்டண நிர்ணய மும் இல்லாததால், சம்பந்தப்பட்ட வர்கள் மீது புகார் அளிக்கவும் முடியவில்லை. எனவே, ஆட் டோக்களுக்கு நிர்ணயம் செய்துள் ளதைபோல், கால்டாக்ஸிகளுக் கும் கட்டண நிர்ணயம் செய்து டிஜிட்டல் மீட்டர்களை பொருத்த உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.

விரைவில்..

இதுதொடர்பாக போக்கு வரத்து ஆணையரக அதிகாரிகளி டம் கேட்டபோது, ‘‘கால்டாக்ஸி களுக்கான புதிய விதிமுறைகளில் கால்டாக்ஸிகளுக்கு தனி உரிமம், ஓட்டுநர்களுக்கு தனி சீருடைகள், ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும், கட்ட ணத்தை அரசு நிர்ணயம் செய் யும் என்பன உள்ளிட்ட முக்கிய விதிமுறைகளை வகுத்துள் ளோம். இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. எனவே, புதிய விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர் பார்க்கிறோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in