Published : 18 Nov 2019 09:37 AM
Last Updated : 18 Nov 2019 09:37 AM

ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பு பணி தீவிரம்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைய தொடங்கியது - பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் 

சென்னை

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது என்று சுகா தாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச் சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 5 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆண் டின் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த டெங்கு, ஜூன் மாதத்துக்கு பின்னர் தீடீரென்று வேகமாக பரவத் தொடங்கி யதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில், இந்த ஆண்டு வழக்கத்தைவிட டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்திருப்பது தெரியவந்தது. ஒருபுறம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தனிவார்டு அமைக்கப்பட்டது. மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்கள் உள்ளிட்ட பொது இடங் களில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. மறுபுறம் ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பு பணியில் தீவிரம் காட்டப்பட்டது. சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கைகளால் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதி காரிகளிடம் கேட்டபோது, “இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க, அந்த காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருந்ததே முக்கிய காரணம். வீடுகளைவிட, வெளிப்பகுதிகளில் தான் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே இருந்தது. சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டது. கொசு ஒழிப்புப் பணியில் மட்டும் 28,147 களப்பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால், கொசுக்களின் உற்பத்தி கணிசமாக குறைந் துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பும் குறையத் தொடங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னரும், டெங்குவின் பாதிப்பு அதி கரிக்கவில்லை. பள்ளி மாணவ, மாணவி யர் மூலம் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் டெங்குவை கண்டு அச்சப்பட தேவை யில்லை. காய்ச்சல் இருந்தால் உடனடி யாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக் குச் சென்று சிகிச்சைப் பெற வேண்டும். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. மருந்து கடைகளும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் பொதுமக் களுக்கு மருந்து மாத்திரையை விற்பனை செய்யக் கூடாது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x