Published : 18 Nov 2019 08:54 AM
Last Updated : 18 Nov 2019 08:54 AM

சந்திரயான்-2 அனுப்பும் தகவல்களால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி: நிலவு, சூரிய குடும்ப தோற்றம் பற்றிய ஆய்வுகளை தீவிரப்படுத்த திட்டம் 

சென்னை

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் அனுப்பும் தகவல்களால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வும் அந்த தகவல்கள் மூலம் நிலவு மற்றும் சூரிய குடும்பத்தின் தோற்றம் பற்றிய ஆய்வு களை தீவிரப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள் ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திராயன்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ம் தேதி ஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பின் செப்டம்பர் 7-ம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேகமாகச் சென்று நிலவின் தரையில் லேண்டர் மோதியதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவை வெற்றி கரமாகச் சுற்றிவந்து சிறப்பான முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட ஆய்வில் நிலவு தொடர்பான பல்வேறு அரிய தகவல்கள் மற்றும் படங்களை ஆர்பிட்டர் அனுப்பி வருவதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்தகட்டமாக நிலவு, சூரிய குடும்பத்தின் தோற்றம் பற்றிய ஆய்வுகளை தீவிரப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: சந்திரயான்-2 மிகவும் தனித்துவமான திட்டமாகும். ஏனெனில், ஒரே திட்டத்தில் நிலவின் மேற்பரப்பு, வெளிப்புறம் உட்பட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய இலக்கு வைக்கப்பட்டது. லேண்டரை தரையிறக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும் திட்டத்தின் 95 சதவீத பணிகள் வெற்றி பெற்றுவிட்டன.

தற்போது தரையிலிருந்து 96 கிமீ உயரத்தில் நிலவை ஆர்பிட்டர் சுற்றி வருகிறது. அதிலுள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், சேஸ் 2, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், 3 டி கேமிராக்கள் உள்ளிட்ட 8 விதமான நவீன சாதனங்கள் மூலம் நிலவின் பரிணாம வளர்ச்சி, அங்குள்ள தாதுக்கள் மற்றும் நீர் மூலக்கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூமிக்கு மிக அருகில் இருந்தாலும் நிலவு பற்றிய முழுமையான தகவல்கள் நம்மிடம் கிடையாது. துருவப் பகுதிகள் கொண்ட நிலவின் மேற்பரப்பின் வரைபடம் கூட தெளிவில்லாமல்தான் உள்ளது.

தற்போது ஆர்பிட்டர் டிரைன் மேப்பிங் கேமரா மூலம் நிலவை முப்பரிமாண வடிவில் படம் எடுத்து அனுப்புகிறது. அதாவது 5 மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகள் மும்மடங்கு தெளிவுத் திறன் உடைய ஸ்டீரியோ படங்களாக எடுக்கப்படுகின்றன. அவை நிலவின் மேற்பரப்பு குறித்த விவரங்களை முழுமையாக அறிய உதவுகின்றன.

இதன்மூலம் அனைத்து பகுதிகளும் அடங்கிய நிலவின் மேற்பரப்பின் மேம்பட்ட டிஜிட்டல் மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், நிலவின் ஆழ்பகுதிகள் மற்றும் பாறைகளின் இடையே இருக்கும் பொட்டாசியம் கதிரியக்க சிதைவின் மூலம் ஆர்கான் 40 வாயுவாக மாறுகிறது.

இந்த வாயு நிலவின் தட்பவெப்பச் சூழல்களால் இரவில் உறைந்து விடுகிறது. அவை பகலில் ஆவியாகி புறக்காற்று மண்டலத்தில் அதிகமாக காணப்படுகின்றன. அதற்கான புறக்காரணிகள் குறித்தும், பூமியின் காந்த மண்டலத்தை நிலவுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும், ஆர்பிட்டர் அனுப்பும் தகவல் களின்படி நிலவின் பரப்பில் பல்வேறு தாக்கங்களால் உருவாகியுள்ள பள்ளங்கள், முகடுகள், குகைகளின் தன்மை, அவை உரு வான விதம், வயது போன்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை விஞ்ஞானி கள் மற்றும் வானியல் அறிஞர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தகவல்களின் அடிப்படையில் நிலவின் தோற்றம், வயது தொடர்பான ஆய்வு களை மேற்கொள்ள ஆர்பிட்டர் வழிவகுத் துள்ளது. அதற்கான ஆய்வுப் பணிகளில் விஞ் ஞானிகள் குழுவினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆராய்ச்சிகள் மூலம் சூரிய குடும்பத்தின் தோற்றம் பற்றிய முக்கிய தகவல் கள் நமக்கு கிடைக்கும் என நம்பு கிறோம். எனினும், நிலவின் தென் துரு வத்தை ஆராய்ந்தால் மட்டுமே நமது பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும். எனவே, தற்போதைய ஆய்வுகளுக்கு உறு துணையாக சந்திரயான்-3 விண்கலம் மூலம் விரைவில் நிலவுக்கு லேண்டர் அனுப்பப் படும். அதற்கான முன்னேற்பாடுகள் தொடங் கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.புதிய தகவல்களின் அடிப்படையில் நிலவின் தோற்றம், வயது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள ஆர்பிட்டர் வழிவகுத்துள்ளது. அதற்கான ஆய்வுப் பணிகளில் விஞ்ஞானிகள் குழுவினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x